செபாவு மாவட்டம்

ஆள்கூறுகள்: 03°14′49″N 113°17′59″E / 3.24694°N 113.29972°E / 3.24694; 113.29972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபாவு மாவட்டம்
Sebauh District
சரவாக்
Location of செபாவு மாவட்டம்
செபாவு மாவட்டம் is located in மலேசியா
செபாவு மாவட்டம்
      செபாவு மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 03°14′49″N 113°17′59″E / 3.24694°N 113.29972°E / 3.24694; 113.29972
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபிந்துலு பிரிவு
மாவட்டம்பிந்துலு மாவட்டம்
நிர்வாக மையம்செபாவு நகரம்
மாவட்ட அலுவலகம்பிந்துலு
உள்ளூர் நகராட்சிபிந்துலு மேம்பாட்டு ஆணையம்
(Bintulu Development Authority)
பரப்பளவு
 • மொத்தம்5,262.9 km2 (2,032.0 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்33,046
 • அடர்த்தி6.3/km2 (16/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு97000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QT
செபாவு மாவட்டத்தில் இலாபாங்கு நகரம்

செபாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sebauh; ஆங்கிலம்: Sebauh District; சீனம்: 民都鲁县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பிந்துலு பிரிவில் ஒரு மாவட்டமாகும். இதன் எல்லைகளாக மிரி மாவட்டம், பாராம் மாவட்டம், காப்பிட் பிரிவு, பெலாகா மாவட்டம் மற்றும் தாதாவு மாவட்டம் ஆகியவை உள்ளன.[1]

செபாவு நகரம் (Sebauh Town), செபாவு மாவட்டத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதார மையமாக விளங்குகிறது.

செபாவு மாவட்டம்; பிந்துலு நகரத்திற்கு வடகிழக்கே 50 கி.மீ. (31 மைல்); சிபு மாவட்டத்திற்கு வடகிழக்கே 216 கி.மீ. (134 மைல்); மிரி மாவட்டத்திற்கு தென்மேற்கே 200 கி.மீ. (120 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.

இனக் குழுக்கள்[தொகு]

செபாவு மாவட்டம் இபான், சீனர், மெலனாவ், மலாய் மற்றும் ஒராங் உலு மக்களின் தாயகமாக விளங்குகிறது. பெரும்பாலான இபான்கள் செபாவு மாவட்டத்தின் கிராமப்புறங்களில், அதாவது பாண்டான், இலபாங், துபாவு மற்றும் காகசு ஆகிய கிராமங்களில் பரவி உள்ளனர்.

மெலனாவு மக்கள் அல்லது பிந்துலு மெலனாவு மக்கள் (Melanau Bintulu) செபாவு நகரம் மற்றும் செபாவு கிராமப்புற பகுதிகளில் மிகுதியாக உள்ளனர். செபாவு மாவட்டத்தில் 13 கிராமங்கள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 291 நீளவீடுகள் உள்ளன.[2]

மலாய் மக்கள்[தொகு]

மலாய் மக்களில் (Malay People) பலர் தொடக்கத்தில் செபாவு பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருப்பினும், உள்ளூர் மக்களுடன் குறிப்பாக மெலனாவு மக்களுடன் (Melanau People) திருமணம் செய்து கொண்டது; மலாய் மக்களை செபாவுவில் உள்ள முக்கிய இனங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

சீனர் மக்கள் செபாவு நகரில் அதிக அளவில் உள்ளனர். சிலர் கோலா கெபுலு (Kuala Kebulu) மற்றும் செலாலோங்கு (Jelalong) கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். கென்னியா (Kenyah), காயான் (Kayan), தாதாவு (Tatau), பெனான் (Penan) மற்றும் புனான் (Punan) போன்ற ஒராங் உலு (Orang Ulu) இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் செபாவு மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர்.[3]

வெளிநாட்டுத் தொழிலாளர்கள்[தொகு]

காட்டு மரங்கள் வெட்டுதல் மற்றும் காட்டு மரப் பொருள்கள் தொழில் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

சான்றுகள்[தொகு]

  1. "Sebauh District, Malaysia". Geonames. பார்க்கப்பட்ட நாள் May 19, 2021.
  2. "Sebauh District has 11 villages and 195 longhouses that are recognized and have certificates of appointment while 2 villages and 96 longhouses are already registered at the Sebau District Office". bintulu.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 4 February 2023.
  3. Rakan Sarawak - Know Your Sub-District section பரணிடப்பட்டது 2012-09-08 at Archive.today from Rakan Sarawak Edisi April 2002.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபாவு_மாவட்டம்&oldid=3791570" இலிருந்து மீள்விக்கப்பட்டது