இறப்பில்லா உயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறப்பில்லா உயிரி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: குழியுடலிகள்
வகுப்பு: கைட்ரோசூவா
வரிசை: ஆந்தோதீகேக்டா
குடும்பம்: ஓசியானிடே
பேரினம்: துரிதோப்சிசு
இனம்: து. நியூட்ரிகுலா
இருசொற் பெயரீடு
துரிதோப்சிசு நியூட்ரிகுலா
மெக்கார்தி, 1857[1]

துரிதோப்சிசு நியூட்ரிகுலா (Turritopsis nutricula) என்பது இறப்பில்லா உயிரி என அறியப்படும் சிறிய நீருயிரிகள் (கைட்ரோசோவான்) ஆகும். இது முதிர்ச்சியடைந்தவுடன் இதன் உயிரணுக்களை இளம் பருவத்திற்கு மாற்றும் தன்மையுடையது. இந்த இசைவாக்கப் பண்பு தனி உயிரினத்தின் ஆயுளை நீட்டிப்பதற்காக உருவாகியிருக்கலாம். துரிதோப்சிசு பேரினத்தின் பல்வேறு சிற்றினங்கள் முன்பு து. நியூட்ரிகுலா என வகைப்படுத்தப்பட்டன. இதில் "இறவா ஜெல்லிமீன்கள்" இப்போது து. தோக்ர்னி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

வாழ்க்கை சுழற்சி[தொகு]

கைட்ரோசோவான்கள் தங்கள் வாழ்வில் பவளமொட்டு நிலை மற்றும் மெடுசா நிலை என இரண்டு தனித்தனி நிலைகளைக் கொண்டுள்ளன. பவளமொட்டு நிலை கடலடியில் வாழும் நிலையாகும். இதில் உயிரணுக்கள் கூட்டமைப்பினை உருவாக்குகின்றன. மெடுசா நிலை ஒரு ஒற்றை, மிதவை உயிரின நிலையாகும். பொதுவாக கைட்ரோசோவாவில் மெடுசா பவளமொட்டு நிலையிலிருந்து பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாகிறது. பவளமொட்டு மெடுசாவின் பாலினப்பெருக்க முறையில் உருவாகிறது.[3] து. நியூட்ரிகுலாவில், மிதவை உயிரியான பவளமொட்டு அல்லது மெடுசா அரும்புகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இவை புதிய மெடுசாக்களை உருவாக்குகின்றன.[4] இந்த பேரினத்தில் பல பெயரளவிலான சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை துரிதோப்சிசு நியூட்ரிகுலா என்ற உலகாளவில் காணப்படும் சிற்றினத்தை ஒத்ததாகக் கூறப்பட்டன.[5]

வாழ்க்கை சுழற்சியை மீளமைத்தல்[தொகு]

துரிதோப்சிசு நியூட்ரிக்குலா மெடுசாவில் எந்நிலையிலும் பவளமொட்டு நிலைக்குத் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. து. நியூட்ரிக்குலா என்பது முதன்முதலில் அறியப்பட்ட பல உயிரணுகொண்ட உயிரியாகும். இது பாலின முதிர்ச்சியடைந்து தன் இளம் கூட்டுயிரி நிலைக்குத் திரும்பும் தன்மையினை கொண்டுள்ளது. மெடுசாவிலிருந்து பவளமொட்டு வரையிலான இந்த மீளமைவு வெளிப்புற குடை மற்றும் விலங்குகளின் செரிமான அமைப்பின் ஒரு பகுதியிலிருந்து மாறுபட்ட உயிரணுக்கள் இருப்பதால் மட்டுமே நிகழ்கின்றது.[6] இந்த மாறுபட்ட உயிரணுக்களில் வேறு வகையான உயிரணுவாக மாறக்கூடிய தண்டு உயிரணுக்கள் அல்லாத உயிரணுக்களால் மாற்றத்தின் திறன் இந்த சிற்றினத்தின் மாறும் வாழ்க்கைச் சுழற்சியில் முக்கியமானது. இந்த செயல்பாட்டில் தண்டு உயிரணுக்கள் பங்கு வகிக்கின்றனவா இல்லையா என்பது தெரியவில்லை.[7] து. நியூட்ரிகுலாவின் இந்த வழக்கமான மாற்றத்தின் காரணமாக, இது காலவரையற்ற ஆயுட்காலம் கொண்டதாகக் கருதப்படுகிறது.[6]

துரிதோப்சிசு நியூட்ரிக்குலாவின் மீள் வாழ்க்கைச் சுழற்சியில் நான்கு நிலைகள் உள்ளன. இவை ஆரோக்கியமான மெடுசா (சுறுசுறுப்பாக நீந்தும் நிலை), ஆரோக்கியமற்ற மெடுசா (நீந்த இயலா நிலை), நான்கு இலை குளோவர் மற்றும் கூடு (பாலிப்பை உருவவியல் ரீதியாக உருவாக்கும்) ஆகும்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Turritopsis nutricula McCrady 1857 பரணிடப்பட்டது 2010-04-03 at the வந்தவழி இயந்திரம் - Encyclopedia of Life
  2. M. P. Miglietta; S. Piraino; S. Kubota; P. Schuchert (2007). "Species in the genus Turritopsis (Cnidaria, Hydrozoa): a molecular evaluation". Journal of Zoological Systematics and Evolutionary Research 45: 11–19. doi:10.1111/j.1439-0469.2006.00379.x. 
  3. Schmid, Volker (1974-05-01). "Regeneration in Medusa buds and Medusae of Hydrozoa" (in en). Integrative and Comparative Biology 14 (2): 773–781. doi:10.1093/icb/14.2.773. பன்னாட்டுத் தர தொடர் எண்:1540-7063. https://academic.oup.com/icb/article/14/2/773/2014153. 
  4. Bavestrello, G., Sommer, C., & Michele, S. (1992). Bi-directional conversion in Turritopsis nutricula (Hydrozoa). Sci Mar, 56(2-3), 137-40.
  5. {{Miglietta, M. P., et al. “Species in the Genus Turritopsis (Cnidaria, Hydrozoa): a Molecular Evaluation.” Journal of Zoological Systematics and Evolutionary Research, Accepted on 9 April 2006, vol. 45, no. 1, 2007, pp. 11–19, https://doi.org/10.1111/j.1439-0469.2006.00379.x.}}
  6. 6.0 6.1 Piraino, Stefano; Boero, Ferdinando (June 1996). "Reversing the life cycle: Medusae transforming into polyps and cell transdifferentiation in Turritopsis nutricula (Cnidaria, Hydrozoa)". The Biological Bulletin; Woods Hole 190 (3): 302–312. doi:10.2307/1543022. பப்மெட்:29227703. 
  7. Ma, Hongbao; Yang, Yan (2018). "Turritopsis nutricula". Nature and Science 8 (2): 15–20. 
  8. Carla’, E. C., Pagliara, P., Piraino, S., Boero, F., & Dini, L. (2003). Morphological and ultrastructural analysis of turritopsis nutricula during life cycle reversal. Tissue and Cell, 35(3), 213–222. https://doi.org/10.1016/s0040-8166(03)00028-4

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறப்பில்லா_உயிரி&oldid=3648058" இலிருந்து மீள்விக்கப்பட்டது