ஓகோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓகோவர்
Oakover
ஓகோவரின் நுழைவு வாயில்
Map
பொதுவான தகவல்கள்
இடம்பெம்லோ
நகரம்சிம்லா
நாடுஇந்தியா
தற்போதைய குடியிருப்பாளர்

ஓகோவர் (Oakover) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்கதொரு கட்டிடம் ஆகும். சிம்லாவில் கட்டப்பட்ட ஆரம்பகால வீடுகளில் இதுவும் ஒன்று. இமாச்சல பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமுமாகும். [1]

வரலாறு[தொகு]

ஒரு பிரித்தானிய காலகட்ட கட்டிடமான ஓகோவர் முன்பு முன்னாள் பாட்டியாலா மாநிலத்தின் மகாராசாக்களின் வசிப்பிடமாக இருந்தது. [2]

ஓகோவர் கல்லறை 1828 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. சிம்லாவில் உள்ள பழமையான பிரித்தானியர் கால கல்லறையாக இது கருதப்படுகிறது. 1841 ஆம் ஆண்டு வரை இக்கல்லறை பயன்பாட்டில் இருந்தது, பின்னர் இது பழுதடைந்து புறக்கணிக்கப்பட்டது. [3] [4]

கலை மற்றும் பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

பிரித்தானிய புகைப்படக் கலைஞர் சாமுவேல் பார்ன் 1863 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அவர் சிம்லாவுக்குச் சென்று, ஓகோவரில் இருந்தும் சிம்லாவிலிருந்தும் பல புகைப்படங்களை எடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Oakover' receives CM". The Tribune. 1 Jan 2018. http://www.tribuneindia.com/news/himachal/-oakover-receives-cm/521674.html. 
  2. "Oakover Shimla – A Jinxed Building | Hill Post". hillpost.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-24.
  3. "A requiem for dead at Himachal's cemeteries | Hill Post". hillpost.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  4. "British organization offers help to restore cemeteries | UCAN India". india.ucanews.com. Archived from the original on 2018-04-09. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகோவர்&oldid=3684754" இலிருந்து மீள்விக்கப்பட்டது