பாந்தெரினே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாந்தெரினே [1]
புதைப்படிவ காலம்:பிந்தைய மீயோசின் முதல் கோலோசீன் வரை
பாந்தெரினே துணைக் குடும்ப உறுப்பினர்கள் (இடமிருந்து வலம்): ஜாகுவார், சிறுத்தை, சிங்கம், புலி, பனிச்சிறுத்தை மற்றும் படைச்சிறுத்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்

பாந்தெரினே (Pantherinae) என்பது பெலிடே குடும்பத்தில் உள்ள ஒரு துணைக் குடும்பமாகும். இதனை 1917-ல் ரெஜினால்ட் இன்னசு போகாக் என்பவரால் முதன்முதலில் பாந்தெரா பேரினத்துடன் விவரிக்கப்பட்டது.[2] இது 9.32க்கும் 4.47 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் பாந்தரினே என பொதுவான மூதாதையரிடமிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டது.[3][4]

சிறப்பியல்புகள்[தொகு]

பாந்தெரினே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் மீள் தசைநாண்கள் கொண்ட ஒரு முழுமையற்ற எலும்புகள் கொண்ட குரல்வளை எலும்பால் வகைப்படுத்தப்படுகின்றன.[2] இவை தட்டையான ரைனேரியத்தை கொண்டுள்ளன. இது மூக்கின் முதுகுப் பக்கத்தை மட்டுமே அடையும். நாசிக்கு இடையே உள்ள பகுதி குறுகியது மற்றும் நாசித்துளையில் உள்ளதைப் போலப் பக்கவாட்டாக நீட்டிக்கப்படவில்லை.[5]

பாந்தெரா பேரினங்கள் தடிமனான சீதமென்சவ்வு புறணியுடன் கூடிய ஒற்றை, வட்டமான, குரல் மடிப்பு, ஒரு பெரிய குரல் தசை மற்றும் நீண்ட மற்றும் குறுகிய சவ்வுகளுடன் கூடிய பெரிய கிரிகோதைராய்டு தசை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பத்தொன்பது மி.மீ. அளவினை விட நீளமான குரல் மடிப்பு பனிச்சிறுத்தையைத் தவிர மற்ற அனைத்தையும் கர்ஜனை செய்ய உதவுகிறது. ஏனெனில் இது மி.மீ. என்ற குறுகிய குரல்வளையைக் கொண்டுள்ளது. காற்றோட்டத்திற்குக் குறைந்த எதிர்ப்பை வழங்குகிறது. இந்த வேறுபாடு காரணமாக அன்சியா பேரினத்தில் இதனைத் தக்கவைக்க முன்மொழியப்பட்டது.[6][7]

வகைப்பாட்டியல்[தொகு]

போக்காக் முதலில் பேந்தெரினேவில் பேந்தெரா மற்றும் அன்சியா பேரினங்களைக் கொண்டதாக என்று வரையறுத்தார்.[2] இன்று, அன்சியா, பாந்தெரா பேரினத்தின் கீழ் உட்பட்டதாகவும், நியோபெலிசு பேரினமும் சேர்க்கப்பட்டுள்ளது.[8]

வாழும் பேரினங்கள்[தொகு]

பாரம்பரிய தோற்றவமைப்பு வகைப்பாட்டின் படி தொகுக்கப்பட்ட பாந்தெரனாவில் உள்ள உயிரலகினை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.[8] தன்நிறப்புரி, எக்சு. டி. என். ஏ., ஒய். டி. என். ஏ. மற்றும் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி மரபணுப் பிரிவு இருதரப்பு அணுக்கரு மரபணுக்களின் பகுப்பாய்வு அடிப்படையில் மதிப்பீடுகள். [4] இருதரப்பு அணுக்கரு மரபணுக்களின் பகுப்பாய்வு அடிப்படையில் மதிப்பீடுகளின்[9] அடிப்படையில், பாந்தரினே மரபணுவமைப்பு மதிப்பிடப்பட்ட மரபணு வேறுபாடு நேரங்கள் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (mya) எனக் குறிக்கப்படுகின்றன.

பேரினம் சிற்றினம் படம் செம்பட்டியல் நிலை மற்றும் பரவல்
நியோபெலிசு

(கிரே 1821)[10]
14.45 - 8.38 மிஆமு

படைச்சிறுத்தை

நி. நெபுலோசா (கிரிப்த், 1821)

9.32 - 4.47 மிஆமு

அழிவாய்ப்பு இனம்

சுந்தா பனிச்சிறுத்தை

நி. தியார்தி (குவெயர், 1823)

2 to 0.9 மிஆமு [11]

அழிவாய்ப்பு இனம்

பாந்தெரா

ஓகென், 1816
11.75 - 0.97 மிஆமு [4]

சிறுத்தைபா. பார்டசு (லின்னேயஸ், 1758)4.63 - 1.81 மிஆமு அழிவாய்ப்பு இனம்

புலி

பா. டைகிரிசு (லின்னேயஸ், 1758)

4.62 - 1.82 மிஆமு

அருகிய இனம்

பனிச்சிறுத்தை

பா. அன்சியா (சிரெபர், 1775)

4.62 - 1.82 மிஆமு

அழிவாய்ப்பு இனம்

சிங்கம்பா. லியோ (லின்னேயஸ், 1758) 3.46 - 1.22 மிஆமு அழிவாய்ப்பு இனம்

ஜாகுவார்

பா. ஓன்கா (லின்னேயஸ், 1758)

3.46 - 1.22 மிஆமு

அச்சுறு நிலையை அண்மித்த இனம்

பரிணாமம்[தொகு]

பெலிடே மயோசீனின் பிற்பகுதியில் மத்திய ஆசியாவில் தோன்றியது. துணைக் குடும்பமான பாந்தெரினே 14.45க்கும் 8.38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெலிடேவிலிருந்து பிரிந்தது.[3][4] பல புதைபடிவ பாந்தெரா சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • பாந்தெரா பிளைதே (Panthera blytheae) என்பது அறியப்பட்ட பழமையான சிற்றினமாகும். இது 5.95 4.1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.[12]
  • பாந்தெரா பேலியோசினென்சிசு இரண்டு முதல் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு ஆசியாவில் ஆரம்பக்கால பிலிசுடோசீனில் வாழ்ந்தது.[13]
  • பாந்தெரா டான்சுகை (Panthera zdanskyi) 2.55 முதல் 2.16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.[13]
  • பாந்தெரா கோமாசூஎக்னென்சிசு (Panthera gombaszoegensis) சுமார் 2 முதல் 0.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் வாழ்ந்தது.[14]
  • பாந்தெரா யங்கி பிலிசுடோசினில் சுமார் 0.69க்கும் 0.42 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் வாழ்ந்தது.[15]
  • ஐரோப்பாவில் சுமார் 450,000 முதல் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது குரோமேரியன் இடைப் பனிப்பாறை பகுதியில் வாழ்ந்த பாந்தெரா இசுபெலியா. [16]
  • 340,000 முதல் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு பிலிசுடோசின் மற்றும் ஆரம்பக்கால ஹோலோசீன் காலத்தில் வட அமெரிக்காவில் வாழ்ந்த பாந்தெரா அட்ராக்சு.[17]
  • பாந்தெரா ஷாவி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த சிங்கம் போன்ற பூனை. இது பிலிசுடோசீனின் ஆரம்பக்காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.[18]
  • பிலிசுடோசீன் காலத்தில், மெக்சிகோவில் உள்ள யுகடான் தீபகற்பத்தில் வாழ்ந்த பாந்தெரா பலாமாய்டுசு.[19]

பெலிடே குடும்ப இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடியின் மரபணு தனித்துவமான குறிப்பான்களை கொண்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன.[20][21]

டி. என். ஏ. அடிப்படையிலான ஆய்வின் முடிவுகள், புலி (பாந்தெரா டைகிரிசு) முதலில் கிளைத்ததாகவும், அதைத் தொடர்ந்து ஜாகுவார் (பா. ஓன்கா), சிங்கம் (பா. லியோ), பின்னர் சிறுத்தை (பா. பார்டசு) மற்றும் பனிச்சிறுத்தை (பா. யுனிகா) தோன்றின என்றும் குறிப்பிடுகின்றன.[22]

பெலிசு பாமிரி, முன்பு மெட்டெய்லூரசு என்று குறிப்பிடப்பட்டது. இப்போது தற்போதுள்ள பாந்தெரனாவின் உறவினராகக் கருதப்படுகிறது.[23]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 545–548. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000220. 
  2. 2.0 2.1 2.2 Pocock, R. I. (1917). "The Classification of existing Felidae". The Annals and Magazine of Natural History. Series 8 XX: 329–350. doi:10.1080/00222931709487018. https://archive.org/stream/annalsmagazineof8201917lond#page/n359/mode/2up. 
  3. 3.0 3.1 Johnson, W. E.; Eizirik, E.; Pecon-Slattery, J.; Murphy, W. J.; Antunes, A.; Teeling, E.; O'Brien, S. J. (2006). "The late Miocene radiation of modern Felidae: a genetic assessment". Science 311 (5757): 73–77. doi:10.1126/science.1122277. பப்மெட்:16400146. Bibcode: 2006Sci...311...73J. https://zenodo.org/record/1230866. 
  4. 4.0 4.1 4.2 4.3 Li, G.; Davis, B. W.; Eizirik, E.; Murphy, W. J. (2016). "Phylogenomic evidence for ancient hybridization in the genomes of living cats (Felidae)". Genome Research 26 (1): 1–11. doi:10.1101/gr.186668.114. பப்மெட்:26518481. 
  5. Hemmer, H. (1966). "Untersuchungen zur Stammesgeschichte der Pantherkatzen (Pantherinae). Teil I". Veröffentlichungen der Zoologischen Staatssammlung München 11: 1–121. https://archive.org/stream/verfentlichungen6668zool#page/n11/mode/2up. 
  6. Hast, M. H. (1989). "The larynx of roaring and non-roaring cats". Journal of Anatomy 163: 117–121. பப்மெட்:2606766. 
  7. Weissengruber, G. E.; Forstenpointner, G.; Peters, G.; Kübber-Heiss, A.; Fitch, W. T. (2002). "Hyoid apparatus and pharynx in the lion (Panthera leo), jaguar (Panthera onca), tiger (Panthera tigris), cheetah (Acinonyx jubatus) and domestic cat (Felis silvestris f. catus)". Journal of Anatomy 201 (3): 195–209. doi:10.1046/j.1469-7580.2002.00088.x. பப்மெட்:12363272. 
  8. 8.0 8.1 Kitchener, A. C.; Breitenmoser-Würsten, C.; Eizirik, E.; Gentry, A.; Werdelin, L.; Wilting, A.; Yamaguchi, N.; Abramov, A. V. et al. (2017). "A revised taxonomy of the Felidae: The final report of the Cat Classification Task Force of the IUCN Cat Specialist Group". Cat News (Special Issue 11): 64−75. https://repository.si.edu/bitstream/handle/10088/32616/A_revised_Felidae_Taxonomy_CatNews.pdf?sequence=1&isAllowed=y. 
  9. Li, G.; Davis, B. W.; Eizirik, E.; Murphy, W. J. (2016). "Phylogenomic evidence for ancient hybridization in the genomes of living cats (Felidae)". Genome Research 26 (1): 1–11. doi:10.1101/gr.186668.114. பப்மெட்:26518481. 
  10. Gray, J. E. (1867). "Notes on the skulls of the Cats. 5. Neofelis". Proceedings of the Scientific Meetings of the Zoological Society of London 1867: 265–266. https://archive.org/stream/proceedingsofzoo1867zool#page/264/mode/2up. 
  11. Buckley-Beason, V. A.; Johnson, W. E.; Nash, W. G.; Stanyon, R.; Menninger, J. C.; Driscoll, C. A.; Howard, J.; Bush, M. et al. (2006). "Molecular Evidence for Species-Level Distinctions in Clouded Leopards". Current Biology 16 (23): 2371–2376. doi:10.1016/j.cub.2006.08.066. பப்மெட்:17141620. 
  12. Tseng, Z.J.; Wang, X.; Slater, G.J.; Takeuchi, G.T.; Li, Q.; Liu, J.; Xie, G. (2014). "Himalayan fossils of the oldest known pantherine establish ancient origin of big cats". Proceedings of the Royal Society B: Biological Sciences 281 (1774): 20132686. doi:10.1098/rspb.2013.2686. பப்மெட்:24225466. 
  13. 13.0 13.1 Mazák, J. H.; Christiansen, P.; Kitchener, A. C. (2011). "Oldest Known Pantherine Skull and Evolution of the Tiger". PLOS ONE 6 (10): e25483. doi:10.1371/journal.pone.0025483. பப்மெட்:22016768. Bibcode: 2011PLoSO...625483M. 
  14. Marciszak, A. (2014). "Presence of Panthera gombaszoegensis (Kretzoi, 1938) in the late Middle Pleistocene of Biśnik Cave, Poland, with an overview of Eurasian jaguar size variability". Quaternary International 326-327: 105–113. doi:10.1016/j.quaint.2013.12.029. Bibcode: 2014QuInt.326..105M. 
  15. Sotnikova, M.V.; Foronova, I.V. (2014). "First Asian record of Panthera (Leo) fossilis (Mammalia, Carnivora, Felidae) in the Early Pleistocene of Western Siberia, Russia". Integrative Zoology 9 (4): 517–530. doi:10.1111/1749-4877.12082. பப்மெட்:24382145. 
  16. Burger, J.; Rosendahl, W.; Loreille, O.; Hemmer, H.; Eriksson, T.; Götherström, A.; Hiller, J.; Collins, M. J. et al. (2004). "Molecular phylogeny of the extinct cave lion Panthera leo spelaea". Molecular Phylogenetics and Evolution 30 (3): 841–849. doi:10.1016/j.ympev.2003.07.020. பப்மெட்:15012963. 
  17. Christiansen, P.; Harris, J. M. (2009). "Craniomandibular morphology and phylogenetic affinities of Panthera atrox: implications for the evolution and paleobiology of the lion lineage". Journal of Vertebrate Paleontology 29 (3): 934–945. doi:10.1671/039.029.0314. 
  18. Sabol, M. (2011). "Masters of the lost world: a hypothetical look at the temporal and spatial distribution of lion-like felids". Quaternaire. Hors-série 4: 229–236. https://www.researchgate.net/publication/287422796. 
  19. Stinnesbeck, S. R.; Stinnesbeck, W.; Frey, E.; Avilés Olguín, J.; Rojas Sandoval, C.; Velázquez Morlet, A.; González, A. H. (2019). "Panthera balamoides and other Pleistocene felids from the submerged caves of Tulum, Quintana Roo, Mexico". Historical Biology: An International Journal of Paleobiology 32 (7): 930–939. doi:10.1080/08912963.2018.1556649. 
  20. Wei, L.; Wu, X.; Jiang, Z. (2008). "The complete mitochondrial genome structure of snow leopard Panthera uncia". Molecular Biology Reports 36 (5): 871–878. doi:10.1007/s11033-008-9257-9. பப்மெட்:18431688. 
  21. Yu, L.; Qing-wei, L.; Ryder, O.A.; Ya-ping, Z. (2004). "Phylogenetic relationships within mammalian order Carnivora indicated by sequences of two nuclear DNA genes". Molecular Phylogenetics and Evolution 33 (3): 694–705. doi:10.1016/j.ympev.2004.08.001. பப்மெட்:15522797. http://www.ymf.ynu.edu.cn/SCI/2004SCI/2004/Li%20Yu(2004-2M.P.E).pdf. 
  22. Yu, L.; Zhang, Y. P. (2005). "Phylogenetic studies of pantherine cats (Felidae) based on multiple genes, with novel application of nuclear beta fibrinogen intron 7 to carnivores". Molecular Phylogenetics and Evolution 35 (2): 483–495. doi:10.1016/j.ympev.2005.01.017. பப்மெட்:15804417. 
  23. Geraads, D.; Peigné, S. (2016). "Re-Appraisal of Felis pamiri Ozansoy, 1959 (Carnivora, Felidae) from the Upper Miocene of Turkey: the Earliest Pantherine Cat?". Journal of Mammalian Evolution 24 (4): 415–425. doi:10.1007/s10914-016-9349-6. https://hal.sorbonne-universite.fr/hal-01675275/document. 

வெளி இணைப்புகள்[தொகு]

  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்தெரினே&oldid=3622420" இலிருந்து மீள்விக்கப்பட்டது