பட்டாகிராம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாகிராம்
மாவட்டம்
மேல்:பட்டாகிராம் ஊரின் காட்சி
கீழ்: மதராசா
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
ஆள்கூறுகள்: 34°25′N 73°06′E / 34.41°N 73.1°E / 34.41; 73.1
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டுசூலை 1993
தலைமையிடம்பட்டாகிராம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்1,301 km2 (502 sq mi)
ஏற்றம்1,038 m (3,406 ft)
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்476,749
 • அடர்த்தி370/km2 (950/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே5)
அஞ்சல் குறியீட்டெண்21040
தொலைபேசி குறியீடு0997
தாலுகாக்கள்2
இணையதளம்battagram.kp.gov.pk

பட்டாகிராம் மாவட்டம் (Battagram) (பஷ்தூ: بټګرام ولسوالۍ, உருது: ضلع بٹگرام) பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4] இதன் நிர்வாகத் தலைமையிடம் பட்டாகிராம் நகரம் ஆகும். பட்டாகிராம், கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடகிழக்கே கிலோ மீட்டர் தொலைவிலும்; மன்செராவுக்கு வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 1301 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் மலைகளால் சூழ்ந்துள்ளது. 2005 பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் போது இம்மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

பட்டாகிராம் மாவட்டத்தின் வடக்கில் கொலை-பாலாஸ் மாவட்டம், கிழக்கில் மன்செரா மாவட்டம், தெற்கில் தோர்கர் மாவட்டம், மேற்கில் சாங்லா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 476,749 ஆகும். அதில் ஆண்கள் 238,402 மற்றும் பெண்கள் 238,312 உள்ளனர். எழுத்தறிவு 36.31% கொண்டுள்ளது. 100% விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 161 பேர் மட்டுமே உள்ளனர்.[1]பஷ்தூ மொழி 82.19%, இண்டிகோ மொழி 2.87% மற்றும் 14.32% மகக்ள் பிற பழங்குடி மொழிகள் பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் அல்லாய் தாலுகா மற்றும் பட்டாகிராம் தாலுகா என இரண்டு தாலுகாக்கள் கொண்டுள்ளது. மேலும் 20 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது. [5]

மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. "District Profile BATTAGRAM (PDF)" (PDF). www.erra.pk. Archived from the original (PDF) on 2012-04-30. பார்க்கப்பட்ட நாள் 2017-12-02.
  3. Correspondent, A (2017-09-29). "Hazara varsity campus sought in Battagram" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1360758. 
  4. "Abaseen division to be approved after population census: Hoti" (in en-US). The Nation. http://nation.com.pk/19-Jun-2011/abaseen-division-to-be-approved-after-population-census-hoti. 
  5. Tehsils & Unions in the District of Battagram – Government of Pakistan, NRB, archived from the original on 9 February 2012, பார்க்கப்பட்ட நாள் 19 March 2012

உசாத்துணை[தொகு]

  • 1981 District Census report of Mansehra. District Census Report. 23. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1983. 
  • 1998 District Census report of Batagram. Census publication. 18. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாகிராம்_மாவட்டம்&oldid=3759705" இலிருந்து மீள்விக்கப்பட்டது