இசபெலின் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசபெலின் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உலானியசு
இனம்:
L. isabellinus
இருசொற் பெயரீடு
Lanius isabellinus
கெம்பிரிச் & எக்ரென்பெர்க், 1833

இசபெலின் கீச்சான் (Isabelline shrike) அல்லது தவுரியன் கீச்சான் (லானியசு இசபெல்லினசு) என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது முன்பு சிவப்பு முதுகு கொண்ட கீச்சான் மற்றும் செவ்வால் கீச்சான் ஆகியவற்றின் இணை இனமாகக் கருதப்பட்டது. இது காசுபியன் கடல் மற்றும் வடக்கு மற்றும் மத்திய சீனாவின் தென்கிழக்கே கைதாம் படுகையில் உள்ள ஒரு பரந்த பகுதியில் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவில் குளிர்காலத்தில் காணப்படும்.

சொற்பிறப்பியல்[தொகு]

இதன் பேரினப் பெயர், லானியசு, இலத்தீன் வார்த்தையான " கசாப்பு" என்பதிலிருந்து பெறப்பட்டது. மேலும் சில கீச்சான்களின் உணவுப் பழக்கத்தின் காரணமாக "கசாப்பு பறவைகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர் குறிப்பிட்ட இசபெலினசு என்பதிலிருந்து, "சாம்பல்-மஞ்சள்" என்பதன் புதிய இலத்தீன் பெயரானது முதலாம் காசுடிலின் இசபெல்லா நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் இசுபெயின் மூர்சிலிருந்து விடுதலை பெறும் வரை தனது உள்ளாடைகளை மாற்றமாட்டேன் என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. பொதுவான ஆங்கிலப் பெயர் "ஷ்ரைக்" என்பது பண்டைய ஆங்கில ஸ்க்ரிக், "ஷ்ரைக்" என்பதிலிருந்து வந்தது. இது ஷிரில் அழைப்பைக் குறிக்கிறது.[2]

கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலத்தில் குளிர்காலத்தில்
லானியசு இசபெல்லினசு முட்டை

பழக்கவழக்கங்கள்[தொகு]

இந்த இடம்பெயரக்கூட்டிய நடுத்தர அளவிலான பாசரின் பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள், கொறித்துண்ணிகள் மற்றும் பல்லிகளைச் சாப்பிடுகிறது. மற்ற கீச்சான்களைப் போலவே இது முக்கிய இடங்களிலிருந்து வேட்டையாடுகிறது. இது திறந்த பயிரிடப்பட்ட இடங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.

விளக்கம்[தொகு]

இசபெலின் கீச்சான் இறகுகள், மணல் நிறம்த்தில் உள்ளன. சிவப்பு நிற வாலினைக் கொண்டது. இளம் பறவைகளை இளம் சிவப்பு-முதுகு கீச்சான்களிலிருந்து, அடிப்பகுதியில் உள்ள மிகவும் அரிதான புழுபோன்ற கோடுடைய தோற்றங்களால் வேறுபடுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

அடையாளம் காண[தொகு]

  • Worfolk, Tim (2000) Identification of red-backed, isabelline and brown shrikes Dutch Birding 22 (6): 323-362

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசபெலின்_கீச்சான்&oldid=3927568" இலிருந்து மீள்விக்கப்பட்டது