இரத்னகிரி கோட்டை, மகாராட்டிரம்

ஆள்கூறுகள்: 16°59′46.3″N 73°16′13″E / 16.996194°N 73.27028°E / 16.996194; 73.27028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்னகிரி கோட்டை
பகுதி: கொங்கண் கடற்கரை
இரத்தினகிரி மாவட்டம், மகாராட்டிரம்
இரத்னகிரி கோட்டையின் நுழைவாயில்
இரத்னகிரி கோட்டை is located in மகாராட்டிரம்
இரத்னகிரி கோட்டை
இரத்னகிரி கோட்டை
ஆள்கூறுகள் 16°59′46.3″N 73°16′13″E / 16.996194°N 73.27028°E / 16.996194; 73.27028
வகை கடற்கரைக் கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசு
மக்கள்
அநுமதி
அனுமதியுண்டு
நிலைமை இடிந்த நிலை
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
செம்புரைக்கல்
உயரம் 200 அடி.

இரத்னகிரி கோட்டை (Ratnagiri Fort) இரத்னதுர்க் கோட்டை' அல்லது 'பகவதி கோட்டை' என்றும் அழைக்கப்படும் இது மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோட்டையாகும். இந்த கோட்டையின் உள்ளே பகவதி கோயில் இருப்பதால் இது முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது.

வரலாறு[தொகு]

இந்த கோட்டை பாமினி காலத்தில் கட்டப்பட்டது. 1670-இல் மராட்டிய மன்னர் சிவாஜி பிஜப்பூரின் சுல்தானிடமிருந்து கோட்டையை வென்றார்.[1] மன்னர் சிவாஜி இரண்டு பாதுகாப்புக் கோபுரங்களைக் கட்டினார். ஒன்று தெற்கிலும் மற்றொன்று பழைய நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலும் உள்ளது. 1750-1755 இல் மராட்டிய தளபதி கனோஜி ஆங்கரே என்பவரால் கோட்டையின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டது. பேஷ்வா ஆட்சியின் போது (1755-1818) தோண்டு பாஸ்கர் பிரதிநிதி கோட்டையில் சில சிறிய பழுதுகளை சரி செய்தார்.[2] பின்னர் 1818 இல் ஆங்கிலேயர்களால் கோட்டை கைப்பற்றப்பட்டது.[3] கோவில் 1950 இல் புதுப்பிக்கப்பட்டது.

அணுகல்[தொகு]

இரத்தினகிரி நகரத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் கோட்டை உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு ஒரு அகலமான சாலை செல்கிறது. கோட்டையைச் சுற்றி வர ஒரு மணி நேரம் ஆகும்.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

பகவதி கோயில், இரத்னகிரி கோட்டை
மராத்தி மொழியில் இரத்னகிரி கோட்டையின் வரைபடம்

கலங்கரை விளக்கம் கோட்டையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது. கோட்டையின் உள்ளே பகவதி கோவில், குளம் மற்றும் கிணறு உள்ளது. கோட்டைக்கு கீழே ஒரு குகை உள்ளது. ரெடே புருஜ் அனைத்து கோட்டைகளிலும் வலுவானது ஆகும்.

இதனையும் பார்க்கவும்[தொகு]


குறிப்புகள்[தொகு]

  1. "Ratnadurg, Sahyadri,Shivaji,Trekking,Marathi,Maharastra". Trekshitiz.com. Archived from the original on 5 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Pathak. Maharashtra State Gazetteers- Ratnagiri District. Government of Maharashtra. 
  3. Trekshitiz. "Tringalwadi". www.trekshitiz.com. Trekshitiz. Archived from the original on 13 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)