விண்டோஸ் அசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்டோஸ் அசூர்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடுபெப்ரவரி 1, 2010; 14 ஆண்டுகள் முன்னர் (2010-02-01)
இயக்கு முறைமை
உரிமம்Closed source for platform, Open source for client SDKs
இணையத்தளம்windowsazure.com

வின்டோஸ் அசூர் எனப்படுவது மேகக் கணிமை சார்ந்த உள்கட்டுமானங்களுடன் கூடிய ஒரு அமைப்பாகும். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் நிருவகிக்கப்படுகின்றமையுடன் உலகளாவிய ரீதியில் அமைந்த பல தகவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் வின்டோஸ் ஆசூர் சேவைகளை இணையம் மூலம் அணுகும் போது ஏற்படும் நேர விரையம் குறைக்கப்படுகின்றது. பெப்ரவரி 2010 இல் மைக்ரோசாப்ட் இந்தச் சேவையை அறிமுகம் செய்து வைத்தது.

சிறப்பியல்புகள்[தொகு]

வின்டோஸ் அசூர் மூலம் பெரும்பாலும் இணையம் சார்ந்த செயலிகளை வடிவமைக்க முடியும். ஜூன் 2012 இல் மைக்ரோசாப்ட் வின்டோஸ் அசூர் அமைப்பில் பின்வரும் வசதிகளை வழங்கியது.

  • ஏஎஸ்பி.நெட், பிஎச்பி, நோட்ஜேஎஸ் போன்ற மொழிகளில் எழுத்தப்பட்ட இணையச் செயலிகளை கிட், எப்டிபீ அல்லது பவுண்டேசன் சேர்வர் மூலம் பதிவேற்றி இயக்கக்கூடிய வல்லமை
  • இணையத்தில் இயங்கும் கணணிகள் மூலம் செயலியின் மூலத்தை மாற்றாமலே வழங்கிகளை மாற்றக் கூடிய வசதியை வழங்கியமை. அசூர் வழங்கிகள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை இயக்கக்கூடியவை.
  • மேகக் கணிமை சார்ந்த சேவைகள்
  • தகவல் சேமிப்பு - மைக்ரோசாப்ட் எஸ்கியூவெல் வழங்கிகளில் தரவுகளை மேகக் கணனிகளில் சேமித்து வைக்கக்கூடிய வல்லமை.
  • தரவுச் சேமிப்பு - கோப்புகள், படிமங்கள், காணொளிகள் போன்றவற்றைச் சேமித்து வைக்கும் ஆற்றல்.

வின்டோஸ் அசூர் பல்வேறு செயலி நிரலாக்க இடைமுகங்களையும் வழங்குகின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அசூர் சேவைகள் பற்றிய ஒரு விளக்கப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு வைத்தது [1].

சேவைகள்[தொகு]

  • இணையத்தளங்கள்
  • மேகக் கணிமை சார்ந்த வழங்கிகள்
  • மேகக் கணிமை சார்ந்த சேவைகள்
  • தகவல் மேலாண்மை
  • தரவு மேலாண்மை
  • வியாபாரக் கணிப்பீடுகள்
  • அடையாளம் காணும் சேவைகள்
  • செய்திப் பரிமாற்றம்
  • நகர்பேசி சேவைகள்

நகர்பேசிச் சேவைகள்[தொகு]

விண்டோஸ் அசூர் மொபைல் சேர்விசஸ்[2], நவீன நகர்பேசிகளுக்கான செயலிகளுக்கான தரவுச் சேமிப்பு இடைமுகத்தை வழங்குகின்றது. குறிப்பாக சாதாரணமாக ஒரு செயலியில் இடம்பெறும் வசதிகளை இலகுவாக மற்றும் வேகமாக வடிவமைத்துக்கொள்ளக்கூடிய வசதியை வழங்குகின்றது.

விண்டோஸ் அசூர் மூலம் பயனர்கள் செயலியில் சேமிக்கும் தரவுகளை எஸ்கியூஎல் தரவுத் தளங்களில் அசூர் செயலி நிரலாக்க இடைமுகம்மூலம் இணைத்துக்கொள்ளலாம். அத்துடன் பயனர்கள் புகுபதிகை செய்தல், விடுபதிகை செய்தல் போன்ற செயற்பாடுகளை நிரலாக்க இடைமுகம் மூலம் அசூர் இலகுபடுத்துகின்றது.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வின்டோஸ் நகர்பேசி, வின்டோஸ் இயங்குதளம் ஆகியவற்றிற்கு Push முறைமையில் தகவல்களை அனுப்புத் செய்ற்பாட்டையும் இந்த சேவை இலகுபடுத்துகின்றது[3].

இதைவிட மென்பொருள் தயாரிப்பை விரைவு படுத்த ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வின்டோஸ், எச்டிஎம்எல்5 போன்ற தொழில் நுட்பங்களுக்கான மென்பொருள் மேம்படுத்தற் கருவியையும் மைக்ரோசாப் வழங்குகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. "விளக்கப்படம்". Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  2. அசூர் மொபைல் சேர்விசஸ்
  3. அசூரில் Push செய்திகள் அனுப்புதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_அசூர்&oldid=3597018" இலிருந்து மீள்விக்கப்பட்டது