ககன் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 34°50′N 73°31′E / 34.833°N 73.517°E / 34.833; 73.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ககன் பள்ளத்தாக்கு
کاغان
பள்ளத்தாக்கு
இலையுதிர் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், அக்டோபர் 2015
இலையுதிர் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், அக்டோபர் 2015
ககன் பள்ளத்தாக்கு is located in Khyber Pakhtunkhwa
ககன் பள்ளத்தாக்கு
ககன் பள்ளத்தாக்கு
ககன் பள்ளத்தாக்கு is located in பாக்கித்தான்
ககன் பள்ளத்தாக்கு
ககன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்: 34°50′N 73°31′E / 34.833°N 73.517°E / 34.833; 73.517
நாடு பாக்கித்தான்
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்மன்சேரா
ஏற்றம்2,500 m (8,200 ft)
நேர வலயம்PST (ஒசநே+5)

ககன் பள்ளத்தாக்கு ( Kaghan Valley ) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வாவின் மன்சேரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அல்பைன் பள்ளத்தாக்காகும்.[1][2][3] பள்ளத்தாக்கு வடக்கு பாக்கித்தானில் 155 கிலோமீட்டர்கள் (96 மைல்) தூரத்தை உள்ளடக்கியது.[4] அதன் குறைந்த உயரமான 650 மீ (2,134 அடி) இலிருந்து 4,170 மீ (13,690 அடி) பாபுசர் கணவாயில் அதன் உயரமான இடம் வரை உயர்ந்துள்ளது.[5] 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட காஷ்மீர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், பள்ளத்தாக்கிற்குச் செல்லும் பல பாதைகளை அழித்தன. இருப்பினும் சாலைகள் பெரும்பாலும் புனரமைக்கப்பட்டுள்ளன. ககன், பாக்கித்தானின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.[6][7][8]

நிலவியல்[தொகு]

ககன் பள்ளத்தாக்கு பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வாவில் அமைந்துள்ளது. (முன்னர் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என்று அறியப்பட்டது). மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் முறையே கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் ஆகிய பாக்கித்தானின் நிர்வாகப் பகுதிகளின் எல்லையாக உள்ளது. 155 கிலோமீட்டர் நீளமுள்ள பள்ளத்தாக்கு கீழ் இமயமலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இதன் விளைவாக அல்பைன் காலநிலை மற்றும் பைன் காடுகள் மற்றும் ஆல்பைன் புல்வெளிகள் பரவுகின்றன.[9] குன்கார் ஆற்றின் ஓட்டத்துடன், பள்ளத்தாக்கில் பனிப்பாறைகள், படிகங்கள் போன்ற தெளிவான ஏரிகள், அருவிகள் மற்றும் உறைபனி மலை நீரோடைகள் உருஆகின்றன. ககன் அதன் இயற்கை அழகு மற்றும் நிலப்பரப்புகளுக்கு பிரபலமானது. இதன் விளைவாக உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கோடைகாலத்தைக் கழிக்கும் பிரபல இடமாக இது உள்ளது.[10]

அணுகல்[தொகு]

பாலாகோட் வழியாக மன்சேரா மற்றும் ஆப்டாபாத் வழியாக சாலை மூலம் ககன் பள்ளத்தாக்கை அடையலாம். பாலாகோட்டில், பொதுப் பேருந்துகள் மற்றும் பிற வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்தியும் பள்ளத்தாக்குக்குச் செல்லலாம். கூடுதலாக, ககன் பள்ளத்தாக்கை பெசாவர் அல்லது இஸ்லாமாபாத்திலிருந்து அபோதாபாத் அல்லது மன்சேரா வரை வாகனத்தில் செல்லலாம். சுற்றுலாப் பயணிகள் ஒரு வாடகை வாகனம் அல்லது கிடைக்கக்கூடிய பிற பொதுப் போக்குவரத்து மூலம் பள்ளத்தாக்கிற்குச் செல்லலாம்.

பள்ளத்தாக்கு கோடையில் எப்போதும் அணுகக்கூடியது. மேலும், குளிர்காலத்தில் பார்வையாளர்களுக்கு மூடப்படும். ஏனெனில், பனியாறுகள் குளிர்காலத்தில் ககனுக்குச் செல்லும் சாலைகளைத் தடுக்கின்றன. இருப்பினும் இந்த பனிப்பாறைகள் பொதுவாக பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் உருகும். மே முதல் செப்டம்பர் இறுதி வரை, சாலைகளும், பாபுசார் கணவாயும் திறந்திருக்கும். மே மாதத்தில், வெப்பநிலை 11 °C (52 °F) வரை அடையலாம் மற்றும் 3 °C (37 °F) வரை குறையும்.[11]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Kaghan Valley". tourism.kp.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  2. "Alpine-Climate Valley". www.manhoos.com. Archived from the original on 24 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  3. Shakirullah, J Ahmad, H Nawaz (2016). Recent Archaeological Exploration of the Upper Kaghan Valley, Mansehra, Pakistan. Annual Conference on South Asia 45
  4. "Length of Valley". www.tourismontheedge.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  5. "Elevation of Kaghan Valley". explorepak.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  6. The Kashmir Earthquake of 8 October 2005 – Earthquake Engineering
  7. "Cold wave rules KP, Fata: Snow, landslides block roads in Kaghan valley". www.thenews.com.pk.
  8. "Record number of tourists visit Kaghan Valley". www.thenews.com.pk.
  9. Planet, Lonely. "Kaghan Valley travel | Karakoram Highway, Pakistan". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
  10. "Kaghan – A Jewel Among Valleys". emergingpakistan.gov.pk. Archived from the original on 10 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Best Time to Visit Kaghan Valley". Tourism.gov.pk. Archived from the original on 20 July 2010. பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்_பள்ளத்தாக்கு&oldid=3928432" இலிருந்து மீள்விக்கப்பட்டது