கொக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொக்கரை, காளை மாட்டுக் கொம்பால் செய்யப்படும் காற்றுக்கருவி ஆகும். இது சிவாலயங்களில் பூசைகளின் போது ஊதப்படும் கொக்கரை மற்றும் பழங்குடி காணிக்காரர்களின் கொக்கரை என இரண்டு வகைப்படும். நீண்டு நெளிந்த ஒரு காளை மாட்டுக் கொம்பினால் செய்யப்படும் இசைக்கருவியே கொக்கரை எனப்படும். சிலர் மாட்டுக் கொம்பின் அடி, நுனி, இடைப்பகுதியில் பித்தளைப் பூண் போட்டு அலங்கரித்தும், நுனிப்பகுதியை சற்று சீவி ஊதும் வடிவம் செய்திருக்கிறார்கள். இது எக்காளத்தை விட சிறியதும், சன்னமான ஒலியெழுப்பும்.

மற்றொரு வகையான கொக்கரை தென்தமிழகத்தின் பாபநாசம் மற்றும், கேரள மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான காணிக்காரர் பயன்படுத்தும் கொக்கரை.இது ஒன்றரை அடி நீளம் கொண்ட இரும்புக்குழல் வடிவத்தில் இருக்கும். இதன் மேல்பகுதியில் குறுக்குவாட்டத்தில் பல கோடுகள் கிழிக்கப்பட்டிருக்கும். அக்குழலோடு சங்கிலியால் ஒரு இரும்புக்கம்பி பிணைக்கப்பட்டிருக்கும். குழலை கையில் பிடித்துக்கொண்டு அந்த கம்பியால் கோட்டுப்பகுதியை உரசும்போது ஒருவித மெய்சிலிர்க்கும் இசை எழும்புகிறது.

கொக்கரை பயன்பாட்டுக் கோயில்கள்[தொகு]

சிவன் கோயில்களில் கொக்கரை வாத்தியம் பயன்பாடு அருகி வருகிறது. தற்போது திருவாரூர் தியாகராஜர் கோயில் மற்றும் சில சிவன்/முருகன் கோவில்களில் சிவ வாத்திய குழுவினர் மாட்டுக் கொம்பாலான கொக்கறையை இசைக்கிறார்கள். தமிழகத்தின் பாபநாசம், கேரள மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான காணிக்காரர்கள் இரும்பாலான கொக்கறையை இசைக்கிறார்கள்.

சைவ இலக்கியங்களில் கொக்கரை[தொகு]

சைவத் திருமுறைகளில் பலவிடங்களில் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன. 3,4,5,6,7 மற்றும் 11-ஆம் திருமுறைகளில் கொக்கரை இசைக் கருவி இடம் பெற்றுள்ளது. கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கரை&oldid=3592456" இலிருந்து மீள்விக்கப்பட்டது