ஹாத்ரஸ்

ஆள்கூறுகள்: 27°36′N 78°03′E / 27.60°N 78.05°E / 27.60; 78.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாத்ரஸ்
நகரம்
கவிஞர் ஹாத்ராசியின் பங்கே பவன் இல்லம்
கவிஞர் ஹாத்ராசியின் பங்கே பவன் இல்லம்
அடைபெயர்(கள்): பெருங்காய நகரம்
ஹாத்ரஸ் is located in உத்தரப் பிரதேசம்
ஹாத்ரஸ்
ஹாத்ரஸ்
ஆள்கூறுகள்: 27°36′N 78°03′E / 27.60°N 78.05°E / 27.60; 78.05
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மகா மாயா நகர்
நிறுவப்பட்ட ஆண்டு6 மே 1997
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹாத்ரஸ் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்142 km2 (55 sq mi)
ஏற்றம்178 m (584 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்135,594
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்204101
தொலைபேசி குறியீடு எண்05722
வாகனப் பதிவுUP-86
பாலின விகிதம்870 /
இணையதளம்hathras.nic.in

ஹாத்ரஸ் (Hathras), வட இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள மகா மாயா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]இந்தி மொழியின் வட்டார வழக்கு மொழியான பிராஜ் பாஷா மொழி இந்நகரத்தில் அதிகம் பேசப்படுகிறது.[2]இந்நகரம் பெருங்காய உற்பத்திக்கு பெயர் பெற்றது.[3]

ஹாத்ஸ் நகரக் கோயில்

அமைவிடம்[தொகு]

ஹாத்ரஸ் நகரத்தின் வடக்கே அலிகர் 36 கிலோ மீட்டர் தொலைவிலும்; மேற்கே மதுரா 41 கிலோ மீட்டர் தொலைவிலும்; தெற்கே ஆக்ரா 54 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

ஹாத்ரஸ் நகரத்தில் ஹாத்ரஸ் சந்திப்பு இரயில் நிலையம்[4] உள்ளிட்ட் 4 இரயில் நிலையங்கள் உள்ளது.[5]ஹாத்ரஸ் சந்திப்பு இரயில் நிலையம் வழியாக தில்லி-கான்பூர், [கயை]]-ஹவுரா செல்லும் தொடருந்துகள் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஹாத்ரஸ் நகரத்தின் மக்கள் தொகை 1,35,594 ஆகும். அதில் ஆண்கள் 72,115 மற்றும் பெண்கள் 63,479 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17,533 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.10% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.89%, இசுலாமியர் 13.54%, சமணர்கள் 0.55%, சீக்கியர்கள் 0.18%, கிறித்தவர்கள் 0.22% மற்றும் பிறர் 0.62% ஆகவுள்ளனர்.[6]இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 29,652 மற்றும் 23 ஆகவுள்ளனர்.[7]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹாத்ரஸ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °F (°C) 71.6
(22.0)
82
(27.8)
92.1
(33.4)
102.2
(39.0)
108.7
(42.6)
104
(40.0)
95
(35.0)
93.2
(34.0)
96.6
(35.9)
94.1
(34.5)
73.4
(23.0)
76.1
(24.5)
114.1
(45.6)
தாழ் சராசரி °F (°C) 42.1
(5.6)
53.6
(12.0)
62.8
(17.1)
72.3
(22.4)
82
(27.8)
85.1
(29.5)
81
(27.2)
78.8
(26.0)
70.7
(21.5)
73.4
(23.0)
50.2
(10.1)
44.6
(7.0)
45.5
(7.5)
ஆதாரம்: India Meteorological Department[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Akhilesh renames eight districts". Thehindu.com. 24 July 2012. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
  2. Scott, Jerrie Cobb; Straker, Dolores Y.; Katz, Laurie (2009-06-02) (in en). Affirming Students' Right to Their Own Language: Bridging Language Policies and Pedagogical Practices. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-26945-6. https://books.google.com/books?id=JleOAgAAQBAJ&q=what+language+is+spoken+in+hathras&pg=PA363. 
  3. "Official Website of One District One Product Uttar Pradesh / Hathras". odopup.in. Archived from the original on 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
  4. Hathras Junction railway station
  5. "Hathras Road Railway Station (HTJ) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  6. Hathras City Population 2011
  7. Caste-wise Population – Hathras
  8. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)". India Meteorological Department. December 2019. p. M210. Archived from the original on 28 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 27 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  9. "Extremes of Temperature (From Jan 2020 to Aug 2020)". India Meteorological Department. 16 August 2020. p. M210. Archived from the original on 9 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹாத்ரஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாத்ரஸ்&oldid=3703632" இலிருந்து மீள்விக்கப்பட்டது