சீதாபூர்

ஆள்கூறுகள்: 27°34′N 80°40′E / 27.57°N 80.66°E / 27.57; 80.66
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதாப்பூர்
நகரம்
சீதாப்பூர் is located in உத்தரப் பிரதேசம்
சீதாப்பூர்
சீதாப்பூர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சீதாபூர் நகரத்தின் அமைவிடம்
சீதாப்பூர் is located in இந்தியா
சீதாப்பூர்
சீதாப்பூர்
சீதாப்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°34′N 80°40′E / 27.57°N 80.66°E / 27.57; 80.66
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சீதாபூர் மாவட்டம்
நிறுவப்பட்ட ஆண்டு1857
பெயர்ச்சூட்டுசீதை
ஏற்றம்(in meters)138 m (453 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,77,351
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்261001
வாகனப் பதிவுUP-34
இணையதளம்sitapur.nic.in

சீதாப்பூர் (Sitapur), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சீதாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1] மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடக்கே 88 கிலோ மீட்டர் தொலைவில் சீதாபூர் நகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 177,234 ஆகும். அதில் ஆண்கள் 92,696 மற்றும் பெண்கள் 84,538 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19,794 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.57% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71.21%, இசுலாமியர் 27.66%, சீக்கியர்கள் 0.42%, கிறித்தவர்கள் 0.28 % மற்றும் பிறர் 0.43% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து[தொகு]

இருப்புப் பாதைகள்[தொகு]

சீதாபூர் இரண்டு இரயில் நிலையங்களைக் கொண்டது. ஒன்று சீதாப்பூர் கண்டோன்மெண்ட் இரயில் நிலையம். மற்றொன்று சீதாப்பூர் சந்திப்பு இரயில் நிலையம் ஆகும். லக்னோ, கரக்பூர், மொராதாபாத் போன்ற நகரங்களுடன் இருப்புப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

சாலைப்போக்குவரத்து[தொகு]

லக்னோ-புது தில்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 24 மற்றும் 30 சீதாப்பூர் நகரம் வழியாகச் செல்கிறது.

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sitapur Up Travel Guide". Goibibo.com. 19 June 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. Sitapur City Population 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாபூர்&oldid=3931221" இலிருந்து மீள்விக்கப்பட்டது