கனியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனியியல் (Pomology) என்பது பழங்களையும் அவற்றை அளிக்கும் தாவரங்களை வளர்ப்பதையும் பற்றிய தாவரவியலின் ஒரு பிரிவாகும். ஆங்கிலத்தில் இது போமாலஜி என்றும் ரோமன் மொழிகளின் வழியாக ஃப்ரூட்டி கல்ச்சர் (Fruiti culture) என்றும் அழைக்கப்படுகிறது.

கனியியல் ஆய்வு முதன்மையாக பழ மரங்களின் உடலியங்கியலையும் வளர்ச்சியையும் மேம்படுத்தும் முறைகளையும் ஆராய்வதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. மேம்படுத்தும் முறைகள் என்பது பழங்களின் தரத்தை உயர்த்துவதிலும், பழங்களை உருவாக்கும் காலங்களைக் கட்டுப்படுத்துவதையும், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்துறையில் ஈடுபடுபவர் கனியியலாளர் என்று அழைக்கப்படுகிறார்.

அமெரிக்க வேளாண்மைத் துறை 1886-ம் ஆண்டு என்றி வான் டேமனின் தலைமையில் கனியியலுக்கான பிரிவைத் தொடங்கியது.[1] இந்தியாவில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் 1967-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பெங்களூருவில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் கனியியல், காய்கறி மற்றும் அலங்காரத் தாவரங்களைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Grant, Amy. "What Is Pomology – Information About Pomology In Horticulture". பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. "History of Horticulture in India". பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனியியல்&oldid=3642831" இலிருந்து மீள்விக்கப்பட்டது