ரேவா

ஆள்கூறுகள்: 24°32′N 81°18′E / 24.53°N 81.3°E / 24.53; 81.3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேவா
நகரம்
ரேவா நகரத்தில் கியோட்டி அருவி
ரேவா நகரத்தில் கியோட்டி அருவி
ரேவா is located in மத்தியப் பிரதேசம்
ரேவா
ரேவா
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரேவா நகரத்தின் அமைவிடம்
ரேவா is located in இந்தியா
ரேவா
ரேவா
ரேவா (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°32′N 81°18′E / 24.53°N 81.3°E / 24.53; 81.3
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ரேவா
தோற்றுவித்தவர்விக்கிரமாதித்தியா சிங்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ரேவா நகராட்சி
பரப்பளவு[1]
 • நகரம்69 km2 (27 sq mi)
 • Metro[1]146 km2 (56 sq mi)
பரப்பளவு தரவரிசை22வது [2]
ஏற்றம்304 m (997 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்235,654
 • தரவரிசை8வது[2]
 • அடர்த்தி3,400/km2 (8,800/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்486001 HPO 486002, 486003
தொலைபேசி குறியீடு07662
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு3166-2:IN
வாகனப் பதிவுMP-17
இணையதளம்www.rewa.nic.in

ரேவா (Rewa), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், தென்கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் எல்லையை ஒட்டி அமைந்த ரேவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பகேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த ரேவா நகரம், மாநிலத் தலைநகரான போபால் நகரத்திலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜபல்பூரிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. விந்திய மலைத்தொடர் ரேவா மாவட்டத்தின் நடுவில் உள்ளது. வெள்ளைப் புலிகள் ரேவா மாவட்ட காட்டில் உள்ளன.[3]

வரலாறு[தொகு]

பகேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த ரேவா நகரம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ரேவா சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது. 1948 முதல் 1956 முடிய விந்தியப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான ரேவா நகரம் விளங்கியது. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் படி, விந்தியப் பிரதேசம், மற்றும் மத்திய பாரதம் மாநிலங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 45 வார்டுகளும், 45,275 வீடுகளும் கொண்ட ரேவா மாநகரத்தின் மக்கள் தொகை 2,35,654 ஆகும். அதில் ஆண்கள் 1,24,012 மற்றும் பெண்கள் 111,642 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 25356 (11%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 23,331 மற்றும் 8,914 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.43%, இசுலாமியர் 11.65% சமணர்கள் 0.22%, சீக்கியர்கள் 0.23%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[5]

போக்குவரத்து[தொகு]

இந்தூர்-ரேவா விரைவுச் சாலையின் வரைபடம்

இருப்புப் பாதை[தொகு]

அலகாபாத்-ஜபல்பூர் இருப்புப் பாதை, ரேவா சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் சத்னா தொடருந்து நிலையங்களுடன் இணைக்கிறது.[6]

சாலைகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலைச் சாலை எண்கள் 7, 27 மற்றும் 75 ரேவா நகரம் வழியாகச் செல்கிறது. ரேவா வானூர்தி நிலையம் 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rewa Info" (PDF).
  2. 2.0 2.1 "Census of India 2011 - MADHYA PRADESH" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
  3. Tripathi, Anuj. "World's first 'White Tiger Safari' opened for public in Madhya Pradesh". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  4. "States Reorganisation Act, 1956". India Code Updated Acts. Ministry of Law and Justice, Government of India. 31 August 1956. pp. section 9. பார்க்கப்பட்ட நாள் 16 May 2013.
  5. Rewa Population, Religion, Caste, Working Data Rewa, Madhya Pradesh - Census 2011
  6. Rewa Terminal railway station

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவா&oldid=3931352" இலிருந்து மீள்விக்கப்பட்டது