பச்மரி

ஆள்கூறுகள்: 22°28′00″N 78°24′40″E / 22.4667°N 78.4110°E / 22.4667; 78.4110
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்மரி
மலை வாழிடம்
ஜண்டி கோக் பச்மரி
ஜண்டி கோக் பச்மரி
அடைபெயர்(கள்): சாத்பூராவின் இராணி
பச்மரி is located in மத்தியப் பிரதேசம்
பச்மரி
பச்மரி
பச்மரி is located in இந்தியா
பச்மரி
பச்மரி
ஆள்கூறுகள்: 22°28′00″N 78°24′40″E / 22.4667°N 78.4110°E / 22.4667; 78.4110
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ஹோசங்காபாத்
ஏற்றம்[1]1,067 m (3,501 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
[அஞ்சல் சுட்டு எண்]]461881
தொலைபேசி குறியீடு+91 7578
வாகனப் பதிவுMP-05
அருகமைந்த நகரம்பிபாரியா

பச்மரி (Pachmarhi), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோசங்காபாத் மாவட்டத்தில் உள்ள சாத்பூரா மலைத்தொடரில் 1067 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைவாழிடம் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பச்மாரி இராண்வப் பாசறையாக இருந்தது.[2] பச்மரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியே பச்மரி ஆகும். மராத்தியப் பேரரசு காலத்தில் பச்மாரி பகுதி நாக்பூர் இராச்சியத்தை ஆண்ட போன்சலே அரச வம்சத்தின் கீழ் இருந்தது.

பச்மரி பாறை ஓவியங்கள்[தொகு]

பச்மரி மலைக்குகைகளில், கிமு 9,000 முதல் கிமு 3,000 காலக்கட்டத்தில் தொல்குடி மக்கள் தங்கிய குகைகளில் கிடைத்த வண்ண பாறை ஓவியங்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[3]சத்பூரா மலைத்தொடரில் அமைந்த, பச்மரி மலைகள் குகைகள், பள்ளத்தாக்குகள், பாறைகள் தங்குமிடங்கள் மற்றும் பசுமையான தாவரங்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதி முழுவதும் பல மணற்கல் பாறை தங்குமிடங்கள் கூரைகள் மற்றும் சுவர்களில் பரந்த அளவிலான பாடங்களை சித்தரிக்கும் ஓவியங்களால் தீட்டப்பட்டுள்ளது. இப்பாறை ஓவியங்களில் தாவரங்கள் மற்றும் விலங்குகள், போர்க்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. காளைகள், காட்டெருமைகள், யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் பல்லிகள், மீன்கள், தேள்கள் மற்றும் மயில்கள் போன்ற பறவைகளின் உருவங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் பொதுவாக ஈட்டிகள், குச்சிகள் மற்றும் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடுபவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். பெண் மனித உருவங்கள் எப்போதாவது மட்டுமே ஆரம்பகால ஓவியங்களில் காட்டப்படுகின்றன. வண்ண ஓவியங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் நிறமிகள் இயற்கையாக கிடைக்கும் கனிமங்களான ஹெமாடைட், இரும்பு ஆக்சைடு மற்றும் கயோலின் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. வெள்ளை கயோலின் (சுண்ணாம்பு) உடன் இருண்ட நிறமிகளை கலப்பதன் மூலம் நிறத்தில் மாறுபாடுகள் பெறப்படுகிறது. பச்மாரி மலைகளில் உள்ள பெரும்பாலான ஓவியங்கள் வரலாற்று காலங்களைச் சேர்ந்தவை என்றாலும், ஆரம்பகால இடைக்கற்காலத்திய மெசோலிதிக் சித்தரிப்புகள் இயற்கை சூழல் மற்றும் இடைக்கற்கால வாழ்க்கையின் சில அம்சங்களை பார்வைக்கு வளமான மற்றும் அழுத்தமான காட்சிகளை காட்டுகிறது.

பச்மாரி ஓவியங்கள் வேட்டையாடுதல், நடனம், கூட்டம், மதச் சடங்குகள் மற்றும் வீட்டு காட்சிகளைக் கொண்டது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் பாறைத் தங்குமிடங்களின் செழுமையான சாயல் பாறைச் சுவர்களில் பிரதிபலிக்கின்றன. பாறை ஓவியங்களில், மூதாதையர்கள் ஜோடிகளாக அல்லது வரிசைகளில் நடனமாடுவது மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விலங்குகளை வேட்டையாடி காட்டுத் தேனீக்களின் கூட்டில் இருந்து தேன் சேகரித்தனர்.

பாறை ஓவியக் கலையின் பாணிகள் இயற்கையான அல்லது பிரதிநிதித்துவத்திலிருந்து குறியீட்டு அல்லது சுருக்கம் வரை உள்ளது. பச்மாரியின் அசல் வேட்டையாடுபவர்கள் மற்றும் காட்டுப் பொருள் சேகரிப்பாளர்களின் வழித்தோன்றல்கள் பழங்குடியினரான கோர்க்கு மக்கள் மற்றும் கோண்டு மக்கள் ஆவர். இவர்கள் இன்னும் தங்கள் முன்னோர்களின் சில மரபுகளை நிலைநிறுத்தி வருகின்றனர். இந்த மலைகளில் வாழும் பழங்குடியினர் மரத்தாலான நினைவுப் பலகைகளைக் கொண்டுள்ளனர். அதில் குதிரை மற்றும் சவாரியின் சித்தரிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் மூதாதையர்களால் பாறை உறைவிடங்களில் வரையப்பட்டதைப் போன்றது. மழைக்காலம் மற்றும் பண்டிகை சமயங்களில் வீட்டின் சுவர்கள் பாறைக் கலையில் பிரதிபலிக்கும் உருவங்கள் மற்றும் சின்னங்களால் வரையப்பட்டிருக்கும். இங்கு மிக ஆழமான வேர்களில் இருந்து பிறந்த ஒரு வாழும் பாரம்பரியம் உள்ளது.

பச்மாரி பாசறை நகரம்[தொகு]

இந்திய இராணுவத்தினர் தங்கும் பாசறை மன்றமாக பச்மாரி உள்ளது. இதன் மக்கள் தொகை 12,062 ஆகும். இங்கு இந்திய இராணுவத்தின் படைவீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் போர்ப் பயிற்சி வழங்கும் மையம் உள்ளது.

சுற்றுலா[தொகு]

பச்மாரி ஒரு மலைவாழிடப் பகுதி ஆகும். இங்கு பச்மரி உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் கிமு 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் உள்ளது.

பச்மாரி பாண்டவர் குகைகள்
சூரிய அஸ்தமனக் காட்சி, பச்மாரி
தேனீ அருவி
பச்மாரி ஏரி

போக்குவரத்து[தொகு]

ஹோசங்காபாத், போபால், இடார்சி, சிந்துவாரா, நரசிங்பூர், இந்தூர், ஜபல்பூர் ஆகிய நகரங்களிலிருந்து பச்மாரி மலைவாழிடத்திற்கு செல்ல பேருந்துகள் உள்ளது. பச்மாரி அருமைந்த தொடருந்து நிலையம் இட்டார்சி நகரத்தில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

தட்ப வெப்பம்[தொகு]

கோடக்கால அதிகபட்ச வெப்பம் 30.3 °C ஆகவும்; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 15.5 °C ஆக உள்ளது. ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 2012 மில்லி மீட்டர் ஆகும்..[4]

தட்பவெப்ப நிலைத் தகவல், பச்மாரி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30.6
(87.1)
33
(91)
36.1
(97)
40
(104)
40.6
(105.1)
40.6
(105.1)
37.4
(99.3)
31
(88)
35.6
(96.1)
31.9
(89.4)
29.5
(85.1)
27.8
(82)
40.6
(105.1)
உயர் சராசரி °C (°F) 22.7
(72.9)
25
(77)
29.2
(84.6)
33.7
(92.7)
36.3
(97.3)
31.7
(89.1)
24.6
(76.3)
24.1
(75.4)
25.6
(78.1)
26.5
(79.7)
24.5
(76.1)
23.2
(73.8)
27.26
(81.07)
தாழ் சராசரி °C (°F) 8.9
(48)
10.6
(51.1)
15
(59)
20.1
(68.2)
24.3
(75.7)
22.6
(72.7)
19.9
(67.8)
19.7
(67.5)
19.2
(66.6)
15
(59)
9.9
(49.8)
7.8
(46)
16.08
(60.95)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2.8
(27)
-0.6
(30.9)
3.3
(37.9)
8.9
(48)
13
(55)
15.2
(59.4)
12.2
(54)
13.4
(56.1)
12.4
(54.3)
6.7
(44.1)
1.3
(34.3)
-1.4
(29.5)
−2.8
(27)
பொழிவு mm (inches) 23
(0.91)
16
(0.63)
17
(0.67)
9
(0.35)
12
(0.47)
173
(6.81)
640
(25.2)
616
(24.25)
423
(16.65)
62
(2.44)
13
(0.51)
8
(0.31)
2,012
(79.21)
ஆதாரம்: Climate data[4][5]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pachmarhi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pachmarhi – the Saucer Shaped Valley | TravelDest". 20 July 2010. Archived from the original on 17 June 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
  2. "Pachmarhi, Jewel in the crown of Central India". Times of India. Archived from the original on 13 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
  3. International attention for Pachmarhi rock art
  4. 4.0 4.1 "Pachmarhi climate: Average Temperature, weather by month, Pachmarhi weather averages - Climate-Data.org". en.climate-data.org. Archived from the original on 22 June 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
  5. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2014-03-16. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)



"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்மரி&oldid=3519325" இலிருந்து மீள்விக்கப்பட்டது