உல்ரிச் சுவிங்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்ரிச் சுவிங்கிளி
Huldrych Zwingli
பிறப்பு1 சனவரி 1484
சுவிட்சர்லாந்து
இறப்பு11 அக்டோபர் 1531(1531-10-11) (அகவை 47)
கப்பெல், சுவிட்சர்லாந்து
தொழில்போதகர், இறையியலாளர்
வழமை அல்லது
இயக்கம்
கால்வினிசம், சுவிங்கிலியம்

உல்ரிச் சுவிங்கிளி (Huldrych Zwingli, 1 சனவரி 1484 – 11 அக்டோபர் 1531) சுவிட்சர்லாந்து நாட்டில் சமயசீர்த்தத்திற்கு வழிவகுத்தவர். மார்ட்டின் லூதரின் சமக்காலத்தவரான இவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். 1502 ஆம் ஆண்டு சூரிக் காண்டனில் கிறித்துவப் பாதரியானார். பாவமன்னிப்பு சீட்டு விற்பனை போன்ற திருச்சபையின் முறைகேட்டை கண்டித்தார். விவிலியத்தின் கொள்கைகளை குருமார்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று வழியுறுத்தினார்.ஸ்விட்சர்லாந்தின் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்ததார். 1503 ஆம் ஆண்டு சூரிச் காண்டனில் கிறித்துவப் பாதிரியர் ஆனார். பாவமன்னிப்பு சீட்டு விற்பனை போன்ற திருசபையின் முறைகேட்டை அவர் கண்டித்தார். விவிலியத்தின் கொள்கைகள் குருமார்கள் மிரையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வழியுறுத்தினார். பாவமன்னிப்பு சிட்டுகளை விற்பதற்காக போப் பாண்டவர் சாம்சன் என்பவரை சூரிச் நகருக்கு அனுப்பிவைத்தார். இதனை ஸ்விங்ளி கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார். குருமார்களை போற்றி புகழ்வதையும், பிரம்மச்சரிய பாதரி முறைமையையும் கூட அவர் கண்டித்தார். பிரம்மச்சரியத்திற்கு எதிரான ஸ்விங்ளி கொள்கை பிஷப் ஆட்சேபித்தார். சூரிச் நகரசபை நிராகரித்தார். இதன் மூலம் சிர்த்திறத்தை சூரிச் ஏற்றுக்கொண்டது. 1523ல் போப்பாண்டவர் ஸ்விங்கிளியை சமய விலக்கம் செய்தார். ஆனால் சூரிச் காண்டன் திருச்சபையிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதனால் ஐந்து காண்டன்கள் ஒன்று சேர்ந்து சூரிச் மீது போர்த்தொடுத்தனர். இப்போரில் 1531ல் ஸ்விங்ளி கொல்லப்பட்டார். இறுதியில் ஒவ்வொறு கண்டனும் தாங்கள் விரும்பிய சமயத்தை பின்பற்றலாம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்ரிச்_சுவிங்கிளி&oldid=3861622" இலிருந்து மீள்விக்கப்பட்டது