க. வீரையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. வீரையா (K. Veeriah)(11 சனவரி 1930-12 செப்டம்பர் 1993) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் முத்துக்கோன்பட்டியினைச் சேர்ந்தவர். இவர் புதுக்கோட்டை நகரில் உள்ள சிறீ பிரகதாம்பாள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். இவர் இந்தியாவின் ஐந்தாவது நாடாளுமன்றத்திற்கு 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]

நாடாளுமன்றத் தேர்தல்[தொகு]

கட்சி போட்டியாளர் வாக்குகள் %
திமுக க. வீரையா 251,861 53.9%
இந்திய தேசிய காங்கிரசு ஆர். விஜய ரகுநாத தொண்டைமான் 203,466 43.5%
அதிகபட்சம் 48,395 10.4%
வாக்குப்பதிவு 455,327 75.3%
திமுக வெற்றி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யிடமிருந்து

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வீரையா&oldid=3513240" இலிருந்து மீள்விக்கப்பட்டது