கலைநய சீருடற்பயிற்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைநய சீருடற்பயிற்சிகள்
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு பன்னாட்டு சீருடற்பயிற்சி கூட்டமைப்பு (FIG)
பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள்1881
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
பகுப்பு/வகைஉள்ளரங்கம்
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1896இல் நடைபெற்ற முதல் கோடைக்கால ஒலிம்பிக்கிலிருந்து

கலைநய சீருடற்பயிற்சிகள் (Artistic gymnastics ) போட்டியாளர்கள் பல்வேறு சீருடற்பயிற்சிக் கருவிகளில், தாவுவதற்கு போதிய நேரமின்றி, 30 முதல் 90 விநாடிகள் வரை சிறு பயிற்சிகளை நிகழ்த்தும் ஓர் சீருடற் பயிற்சி போட்டியாகும். இதனை பன்னாட்டு சீருடற்பயிற்சி கூட்டமைப்பு (FIG), கட்டுப்படுத்துவதுடன் பன்னாட்டு போட்டிகளை ஒழுங்குபடுத்தி கோட் ஆஃப் பாயிண்ட்ஸ் எனப்படும் போட்டியாளருக்கு புள்ளிகளை வழங்கும் முறைமையை வடிவமைக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு தேசிய கூட்டமைப்புக்கள் இதனை ஒழுங்குபடுத்துகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் பிற போட்டிச் சூழல்களிலும் கலைநய சீருடற் பயிற்சிகள் பார்வையாளர்கள் விரும்பும் ஓர் நிகழ்வாக விளங்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Artistic gymnastics
என்பதில் ஊடகங்கள் உள்ளன.