பள்ளி வன்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளி வன்முறை (School violence) என்பது மாணவர்-மாணவர் சண்டையிடுதல் மற்றும் உடல் ரீதியான தண்டனை உள்ளிட்ட உடல் ரீதியான வன்முறைகளையும், வாய்மொழி வரம்பு மீறல், பாலியல் வன்முறை, கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட உளவியல் வன்முறைகளையும், இணைய ஒடுக்குதல் உள்ளிட்ட பல வகையான ஒடுக்குதல்கள் மற்றும் பள்ளிக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்வது ஆகியவற்றைக் குறிப்பதாகும். [1] பல நாடுகளில், துப்பாக்கிகள் அல்லது கத்திகள் போன்ற ஆயுதங்கள் பள்ளிகளில் பயன்படுத்தப்படுவது சமீபகாலமாக தீவிரமான பிரச்சனையாக மாறியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கிடையேயான வன்முறை மற்றும் பள்ளி ஊழியர்கள் மீது மாணவர்களின் உடல்ரீதியான தாக்குதல்களும் இதில் அடங்கும்.

பள்ளி வன்முறையின் வடிவங்கள் மற்றும் பல்வேறு வகையான கொடுமைப்படுத்துதல்[தொகு]

பள்ளி வன்முறை பரவலாக எல்லா நாடுகளிலும் நிகழ்கிறது. இது கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரைப் பாதிக்கிறது. இது பெரும்பாலும் இணையர்களால் ஏற்படுகிறது, சில சந்தர்ப்பங்களில், ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளி ஊழியர்களாலும் செய்யப்படுகிறது. பள்ளி வன்முறை உடல், உளவியல் மற்றும் பாலியல் வன்முறையை உள்ளடக்கியது. [2]

உடல் சண்டைகள்[தொகு]

குளோபல் ஸ்கூல் அடிப்படையிலான மாணவர் சுகாதார கணக்கெடுப்பின் (GSHS) படி, "ஒரே பலம் அல்லது சக்தி கொண்ட இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தயாரகும்போது உடல்ரீதியான சண்டை ஏற்படுகிறது" இது உடல்ரீதியான வன்முறையின் ஒரு வடிவமாகும். [2]

பாலியல் வன்முறை[தொகு]

மக்கள்தொகை மற்றும் சுகாதார ஆய்வின் (DHS) படி, பாலியல் வன்முறை என்பது ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய உடலுறவு அல்லது வேறு ஏதேனும் பாலியல் செயல்கள்களில் ஈடுபடுவது ஆகும்.

ஆசிரியர்களால் நடத்தப்படும் உடல்ரீதியான வன்முறை[தொகு]

மரணம், இயலாமை, காயம் அல்லது தீங்கு விளைவிப்பதற்காக உடல் சக்தியை வேண்டுமென்றே பயன்படுத்துவதுவதனை இது குறிக்கிறது. அது தண்டனையின் வடிவமாகப் பயன்படுத்தப்பட்டாலும் வன்முறையாகவே அறியப்படுகிறது. [2]

சான்றுகள்[தொகு]

  1. UNESCO (2017). School Violence and Bullying: Global Status Report. Paris, UNESCO. பக். 9, 110–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-3-100197-0. http://unesdoc.unesco.org/images/0024/002469/246970e.pdf. 
  2. 2.0 2.1 2.2 Behind the numbers: ending school violence and bullying. UNESCO. 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-3-100306-6. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000366483. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_வன்முறை&oldid=3891016" இலிருந்து மீள்விக்கப்பட்டது