பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் (International Commission of Jurists, ICJ) என்பது ஓர் அரசு சாரா பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு ஆகும். இவ்வாணையத்தில் முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரும், அயர்லாந்தின் அதிபருமான மேரி ராபின்சன், மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா உட்படப் பல நாடுகளைச் சேர்ந்த 60 நீதித்துறை வல்லுநர்கள் (நீதிபதிகள், வழக்கறிஞர்கள்) அங்கத்தவர்களாக உள்ளனர்.

சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் உள்ள பன்னாட்டு செயலகத்தின் ஆதரவில் இயங்கும் இந்த ஆணையத்தில் பல நாடுகளிலும் இருந்து பல்வேறு சட்ட மரபுசார் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். மனித உரிமைகள், மற்றும் சட்ட விதிகளைப் பேணிப் பாதுகாக்க, மேம்படுத்த சட்ட வல்லுனர்களின் பங்கை திரப்படுத்துவதற்கான சட்டவாக்கங்களை இவ்வாணையம் நெறிப்படுத்துகிறது. இதைத்தவிர, இவ்வாணையத்தின் கிளைகள் தேசிய மட்டத்தில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகின்றன. இவ்வாணையத்திற்கான உறுப்பினர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தான வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்டக் கல்விமான்கள், மற்றும் சட்ட மாணவர்கள் போன்றோர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]