அமேசான் சுடியோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமேசான் சுடியோசு
வகைகிளை நிறுவனம்
நிறுவுகைநவம்பர் 16, 2010
தலைமையகம்கல்வர் சிட்டி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளாவில்
முதன்மை நபர்கள்ஜெனிபர் சால்கே (தலைமை நிர்வாக அதிகாரி)[1]
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்தொலைக்காட்சி தயாரிப்பு
தொலைக்காட்சி விநியோகம்
திரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
தாய் நிறுவனம்அமேசான்
பிரிவுகள்முதன்மை திரைப்படங்கள்[2]
இணையத்தளம்amazonstudios.com

அமேசான் சுடியோசு அல்லது அமேசான் ஸ்டுடியோஸ் (ஆங்கில மொழி: Amazon MGM Studios) என்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமானம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தயாரித்து மற்றும் விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த நிறுவனம் நவம்பர் 16, 2010 ஆம் ஆண்டில் கல்வர் சிட்டி, கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயக்கி வருகிறது.[3] இது தொலைக்காட்சி தொடர்களை உருவாக்குவதிலும், திரைப்படங்களை விநியோகித்தல் மற்றும் தயாரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது.

இது அமேசானின் டிஜிட்டல் காணொளி ஊடக ஓடை சேவையாக அமேசான் பிரைம் வீடியோ மற்றும் திரையரங்குகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது, இதன் போட்டியாளர்களில் நெற்ஃபிளிக்சு மற்றும் குலு ஆகியவை அடங்கும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lumb, David (February 10, 2018). "NBC's Jennifer Salke is the new Amazon Studios chief". Engadget. Her predecessor, Roy Price, resigned in October 2017
  2. Andreeva, Nellie (17 October 2016). "Amazon Studios Comedy Chief Joe Lewis Adds Drama Oversight, Morgan Wandell To Head International Productions". Deadline.
  3. Fritz, Ben (September 12, 2012). "Amazon Studios going into comics". Los Angeles Times. https://www.latimes.com/entertainment/envelope/cotown/la-et-ct-amazon-studios-comic-20120912,0,5127701.story. 
  4. Perez, Sarah (May 2, 2012). "Amazon Studios Now Funding Original Content Series For Amazon Video Service". TechCrunch. பார்க்கப்பட்ட நாள் May 2, 2012.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்_சுடியோசு&oldid=3804236" இலிருந்து மீள்விக்கப்பட்டது