கோடகனாறு அணை

ஆள்கூறுகள்: 10°35′40″N 77°58′20″E / 10.59444°N 77.97222°E / 10.59444; 77.97222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடகனாறு அணை
அமைவிடம்அழகாபுரி, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூற்று10°35′40″N 77°58′20″E / 10.59444°N 77.97222°E / 10.59444; 77.97222
திறந்தது1977 & 1995
அணையும் வழிகாலும்
உயரம்12.75 மீட்டர்கள் (41.8 அடி)

கோடகனாறு அணை (Kodaganar Dam), அழகாபுரி அணை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் ஓடும் கோடகனாறு ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு பாசன அணையாகும். 1977ஆம் ஆண்டு முதன்முதலில் கட்டப்பட்ட அணையானது 1977ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. பின்னர் அணை முழுமையாகப் புனரமைக்கப்பட்டு 1994-ல் திறக்கப்பட்டது.

இது திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில வறண்ட பகுதிகளுக்கு கோடகனாறு ஆற்றின் குறுக்கே சிறு கால்வாய்கள் மூலம் கரூர் அருகே காவிரி ஆற்றில் சேரும் வரை பாசனம் செய்கிறது.

கட்டுமானம்[தொகு]

கோடகனாறு அணை 1977-ல் மண் புவியீர்ப்பு மற்றும் கொத்து அணையாகக் கட்டப்பட்டது. இதில் 3.05 மீ அகலம் கொண்ட ஐந்து செங்குத்து தூக்கக்கூடிய நீர் அடைப்பான்கள் உள்ளன. அணையானது அடித்தளத்திலிருந்து 15.75 மீ உயரத்தில் ஆற்றுப் படுகையிலிருந்து 11.45 மீ உயரத்தில் உள்ளது. அணையின் முழு நீர்த்தேக்க மட்டத்தில் சேமிப்பு கொள்ளளவு 12.3 மில்லியன் கன மீட்டராகும். இந்நேரத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவானது ஒரு நொடிக்கு 1275 கன மீட்டராக உள்ளது. அதிகபட்ச நீர் மட்டத்திற்கு மேல் 2.5 மீ உயரத்திற்குப் பாதுகாப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது.

அணை பாதிப்பு[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலையில் 1978-ம் ஆண்டு கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையின் கீழ்நிலை சரிவுகளில் பாய்ந்த தண்ணீர் பல்வேறு பகுதிகளில் அணையை உடைத்தது. கூடுதலாக, அடித்தளம் வலுவாக இருந்தபோதிலும், இக்காலத்தில் ஒரு நிலநடுக்கமும் பதிவு செய்யப்பட்டது. வெள்ளத்தின் போது நீர் அடைப்பான்கள் உடனடியாக இயக்கப்பட்டன. ஊழியர்கள் இந்த அடைப்பான்களை ஓரளவு மட்டுமே தூக்க முடியும். மின்சாரம் இல்லாததால் காரணத்தினாலும் மின்னாக்கி செயல்பாடு இல்லாததால் தண்ணீ அடைப்பான்கள் திறக்க இயலவில்லை. இதனால் ஊழியர்கள் கைமுறையாக அடைப்பான்களை இயக்க முடிவு செய்தனர். எவ்வளவோ முயற்சிகள் செய்தும், முடியவில்லை. எனவே இறுதியாகத் தண்ணீர் அணையைத் தாண்டியது. அடுக்கை ஒன்றை நீர் அரித்துக்கொண்டிருந்ததால், பின்புற சரிவுகளில் தண்ணீர் கொட்டியது. 20 மீ முதல் 200 மீ வரையிலான பகுதியில் அணை உடைய ஆரம்பித்தது. அணை முழுவதும் நிரம்பி உடைந்தது போல் காட்சியளித்தது.[1] அணையின் கீழ்ப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மதுரை மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியான அணை, இன்றைய அரவக்குறிச்சி வட்டத்தில் உயிரிழப்பு நிகழ்ந்தன.

புனரமைப்பு[தொகு]

அணை முழுமையாக 1990களின் நடுப்பகுதியில் புனரமைக்கப்பட்டு 12.75 மீட்டர் உயரத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "41.2 History of Dam Failures" (PDF). Nptel.ac.in. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
  2. "Dams in Tamil Nadu". India-wris.nrsc.gov.in. Archived from the original on 24 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "DAM BREAK ANALYSIS USING MIKE11 FOR LOWER NAGAVALI DAM AND RUKURA DAM" (PDF). Ethesis.nitrkl.ac.in. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடகனாறு_அணை&oldid=3929321" இலிருந்து மீள்விக்கப்பட்டது