மஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஜர் என்பது 13-14ஆம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த, தங்க நாடோடிக் கூட்டத்தின் ஒரு நடுக்கால நகரம் ஆகும். காக்கேசியா மற்றும் கருங்கடல் பகுதிகளுக்கு இடையிலான வணிகத்தில் இந்நகரமானது ஒரு காலத்தில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது. 1310-1311இல் இந்நகரம் தனது சொந்த நாணயங்களை அச்சிட்டது. 1395ஆம் ஆண்டு தைமூரின் துருப்புகளால் இது சூறையாடப்பட்டது.

பெரிய மஜாரில் இருந்த முகமதிய வழிபாட்டு இடம். ஓவியம் ஜி. கெய்சிலர் (பல்லாஸ் 1799)

1332ஆம் ஆண்டு வாக்கில் இப்னு பதூதா இந்தப் பட்டணத்திற்கு வருகை புரிந்தார்: "நான் அல்-மச்சர் நகரத்திற்காகப் பயணத்தை மேற்கொண்டேன். அது ஒரு பெரிய பட்டணம். துருக்கியர்களின் சிறந்த நகரங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது. ஒரு பெரிய ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. அப்பட்டணத்தில் தோட்டங்களும் பழங்களும் ஏராளமாக இருந்தன."[1]

உசாத்துணை[தொகு]

  1. Gibb, H.A.R. trans. and ed. (1962). The Travels of Ibn Baṭṭūṭa, A.D. 1325–1354 (Volume 2). London: Hakluyt Society. பக். 479. ; Defrémery, C.; Sanguinetti, B.R. trans. and eds. (1854) (in French, Arabic). Voyages d'Ibn Batoutah (Volume 2). Paris: Société Asiatic. பக். 375. https://books.google.com/books?id=m-UHAAAAIAAJ&pg=PA375. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜர்&oldid=3490706" இலிருந்து மீள்விக்கப்பட்டது