போல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போல்கர் என்பது 8ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை வோல்கா பல்கேரியாவின் தலைநகரமாக விட்டுவிட்டு நீடித்த நகரம் ஆகும். இதே காலகட்டத்தில் வோல்கா பல்கேரியாவின் மற்ற தலைநகரங்களாகப் பில்யர் மற்றும் நூர் சுவர் ஆகியவையும் விளங்கின. இது வோல்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வோல்கா ஆறு கமா ஆற்றுடன் இணையும் இடத்தில் இருந்து ஆற்றின் போக்கில் வரும் வழியில் 30 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த நகருக்கு மேற்கில் தற்போதைய சிறிய பட்டணமான போல்கர் 1991ஆம் ஆண்டிலிருந்து அமைந்துள்ளது. பண்டைய போல்கர் மலைக் கோட்டையானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் பாரம்பரியக் களமாக 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Centre, UNESCO World Heritage. "Bolgar Historical and Archaeological Complex". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்கர்&oldid=3490695" இலிருந்து மீள்விக்கப்பட்டது