குட்டை வால் கீரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டை வால் கீரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உர்வா
இனம்:
உ. பிராக்கியூரா
இருசொற் பெயரீடு
உர்வா பிராக்கியூரா
குட்டை வால் கீரி பரம்பல்
வேறு பெயர்கள்

கெர்பெச்டெசு பிரக்கியூரசு

குட்டை வால் கீறி (உர்வா பிராச்சியுரா ) என்பது தீபகற்ப மலேசியா, சுமத்ரா மற்றும் போர்னியோவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு கீரி சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,500 m (4,900 அடி) உயரம் வரையுள்ள பசுமையான காடு மற்றும் கிராமப்புற தோட்டங்களில் வாழ்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் 2008 ஆண்டு முதல் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக பட்டியலிட்டுள்ளது.[1]

இதனை முதன்முதலில் 1837ஆம் ஆண்டு ஜான் எட்வர்ட் கிரே விவரித்தார்.[2]

இது சிவப்பு-பழுப்பு முதல் கருப்பு மற்றும் கருப்பு மூட்டுகளைக் கொண்டது. தலை சாம்பல் நிறத்தில் கன்னத்தில் கரும்புள்ளியுடன் இருக்கும். இதன் உடல் நீளம் 60–65 cm (24–26 அங்) ஆகும். இதனுடைய குறுகிய வாலின் நீளம் 25 செ.மீ. ஆகும். இதன் எடை சுமார் 1.4 kg (3.1 lb) ஆகும்.

துணை இனங்கள்[தொகு]

  • உ. பி. பிராச்சியுரா
  • உ. பி. ஹோசி[3]
  • உ. பி. ஜாவனென்சிசு
  • உ. பி. பலவானசு
  • உ. பி. பார்வசு
  • உ. பி. சுமத்ரியசு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Duckworth, J. W.; Mathai, J.; Ross, J.; Wilting, A. (2016). "Herpestes brachyurus". IUCN Red List of Threatened Species 2016: e.T41610A45206655. https://www.iucnredlist.org/species/41610/45206655. 
  2. Gray, J. E. (1837). "Description of some or little known Mammalia, principally in the British Mueum Collection". The Magazine of Natural History and Journal of Zoology, Botany, Mineralogy, Geology and Meteorology I (November): 577–587. https://archive.org/details/magazineofnatura101837loud/page/578. 
  3. Francis, C.M. & Payne, J. (1985). A field guide to the mammals of Borneo. Malaysia: Sabah Society


"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டை_வால்_கீரி&oldid=3490164" இலிருந்து மீள்விக்கப்பட்டது