கலாமியன் மரமூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமியன் மரமூஞ்சூறு
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மர மூஞ்சூறு
குடும்பம்:
துபாலிடே
பேரினம்:
துபையா
இனம்:
து. பலவானென்சிசு[1]
இருசொற் பெயரீடு
துபையா பலவானென்சிசு
(மேட்சிசீ, 1898)

கலாமியன் மரமூஞ்சூறு (Calamian treeshrew)(துபையா பலவானென்சிசு) என்பது பிலிப்பீன்சில் உள்ள கலாமியன் தீவுகள் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் புசுவாங்கா மற்றும் குலியோன் தீவுகளில் காணப்படும் ஒரு மரமூஞ்சூறு சிற்றினம் ஆகும்.[1]

செருமனிய விலங்கியல் நிபுணர் பால் மாட்ஷி, கலாமியானிலிந்து ஒரு கலாமியன் மரமூஞ்சூறுவினை முதன்முதலில் விவரித்தார். இது பெர்லின் விலங்கியல் அருங்காட்சியகத்தால் (பெர்லினின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்) பெறப்பட்ட விலங்கியல் சேகரிப்பின் ஒரு பகுதியாகும். இந்த வகை மாதிரியானது பலவான் மரமூஞ்சூறுவிலிருந்து சற்றே குறுகிய முகவாய் மற்றும் கால்விரல்கள், வால் மற்றும் மார்பின் முடி ஆகியவற்றின் இலகுவான நிறத்தால் வேறுபடுவதால்[2] இதைத் தனித்துவமான சிற்றினமாகக் கருதினர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Kennerley, R. (2018). "Tupaia palawanensis". IUCN Red List of Threatened Species 2017: e.T110678346A123808057. https://www.iucnredlist.org/species/110678346/123808057. பார்த்த நாள்: 26 January 2022. 
  2. Matschie, P. (1898). Säugethiere von den Philippinen. Sitzungsbericht der Gesellschaft Naturforschender Freunde zu Berlin: 38–43.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாமியன்_மரமூஞ்சூறு&oldid=3481329" இலிருந்து மீள்விக்கப்பட்டது