த. புஷ்பராஜூ
த. புஷ்பராஜூ (T. Pushparaju) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமாவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியினைச் சார்ந்தவர். புதுக்கோட்டை டி. இ. எல். சி. பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பினை முடித்துள்ளார். புஷ்பராஜூ, 1977ஆம்[1] ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியிலிருந்தும், 1984ஆம்[2] ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரசு குழுவில் 15 ஆண்டுகள் மாவட்ட தலைவராக இருந்தார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India