விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2022

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதம், நாள் - இவை குறித்தான பரிந்துரைகள்[தொகு]

முதற்கட்ட பரிந்துரைகள்[தொகு]

  1. ஆகத்து மாதத்தில் விக்கிமேனியா நடப்பதால், இந்த மாதத்தில் வேண்டாம். மேலும், துப்புரவுப் பணியை முதன்மையாக செய்யவிருப்பதால் நன்கு திட்டமிட்ட பிறகே இந்த மாரத்தானை நடத்த வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:24, 20 சூலை 2022 (UTC)[பதிலளி]
  2. வேங்கைத் திட்டப் பயிற்சிக்குப் பிறகு மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம். துப்புரவுப் பணி எளிதாக இருப்பதோடு, உரிய பயற்சிகள் பெற்றிருப்பதால் பங்களிப்பு முனைப்பாகவும் இருக்கும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:54, 21 சூலை 2022 (UTC)[பதிலளி]

முடிவு: தமிழ் விக்கிமேனியா 2022 நிகழ்ச்சி முடிந்த பிறகு, இயல்பான கலந்துரையாடல் ஒன்றை பங்களிப்பாளர்கள் நடத்தினர். 'வேங்கைத் திட்டப் பயிற்சிக்காக காத்திருக்க வேண்டாம்' எனவும் 2 வாரத்தில் மாரத்தான் நிகழ்வை நடத்தலாம் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதனடிப்படையில், விக்கி மாரத்தானை செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இறுதிப் பரிந்துரைகள்[தொகு]

மாரத்தான் நிகழ்வு என்பது நேரடியாக இணையத்தில் நடக்கும் என்பதால், ஆகத்து இறுதிக்குள் திட்டமிடலை முடிக்க இயலும். செப்டம்பர் மாதத்தில் எந்த ஞாயிறு உகந்தது என்பது குறித்து பயனர்கள் தமது கருத்துகளை இங்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:45, 15 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

  1. எனது விருப்பம், செப்டம்பர் 25 (ஆசிரியர்களுக்கு தேர்வு விடுமுறை) ஸ்ரீதர். ஞா (✉) 16:10, 15 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  2. எனது விருப்பம், செப்டம்பர் 18 அல்லது 25 (பிற ஞாயிறுகளில் ஆய்வு, நூல் அச்சுப்பணி உள்ளது) --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:41, 17 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  3. எனது விருப்பமும் செப்டம்பர் மாதத்தில் 18 அல்லது 25 ஆகிய இரண்டு தேதிகளில் எதில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதேயாகும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 05:08, 18 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  4. செப்டம்பர் 18 அல்லது 25 ஆகிய தேதிகளில் மாரத்தான் வைத்துக் கொள்ளலாம் என்பது எனது எனது விருப்பம்.--Balu1967 (பேச்சு) 06:54, 18 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  5. செப்டம்பர் 25 ஆம் நாள் காலாண்டு விடுமுறை நாள் என்பதால் அதைப் பயன்படுத்தலாம். கூடுதலாக மதுரை விக்கிமேனியாவில் பெற்ற நிதிநல்கையில் சிறு தொகை மீதமுள்ளது. அதைக் கொண்டு செப்டம்பர் 17 அல்லது 18 ஆம் நாள் ஒரு சந்திப்பினை சென்னையில் நிகழ்த்தலாம். அந்தச் சந்திப்பினைச் சிறு பயிற்சிகளும் திட்டமிடலுக்கும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் கருத்திற்கேற்ப முன்னெடுக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 16:18, 18 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  6. செப்டம்பர் 25 ஏற்ற நாள் இரா.முத்துசாமி (பேச்சு) 14:11, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  7. செப்டம்பர் 18 அல்லது 25 ஆகிய இரு நாட்களில் எதையேனும் தெரிவு செய்யலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:37, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  8. எனது விருப்பம் செப்டம்பர் மாதத்தில் எந்த ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பரவாயில்லை.--சா. அருணாசலம் (பேச்சு) 10:25, 24 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

இறுதி முடிவு: பதிவான கருத்துகளின் அடிப்படையில், செப்டம்பர் 25 (ஞாயிறு) அன்று நிகழ்வினை நடத்த முடிவாகியுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:32, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

கால அளவிற்கான பரிந்துரைகள்[தொகு]

  1. சனி, ஞாயிறு என தொடர்ந்து 48 மணி நேரம் நடத்த பரிந்துரைக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:38, 20 சூலை 2022 (UTC)[பதிலளி]
  2. இரண்டு நாட்கள் என்பதை குறைத்து ஒரு நாள் மட்டும் மாரத்தான் நடத்துவது நலம். தேவைப் பட்டால் மற்றொருமுறை ஒருநாள் நடத்தலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 05:38, 21 சூலை 2022 (UTC)[பதிலளி]
    1. கருத்திட்டமைக்கு நன்றி ஐயா; மற்றவர்களின் கருத்தையும் அறிந்த பிறகு இறுதி முடிவினை எடுப்போம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:53, 21 சூலை 2022 (UTC)[பதிலளி]
  3. ஒரு நாளே போதுமானது. சிறிது கால இடைவெளி விட்டு மற்றொரு ஒரு நாள் மாரத்தான் நடத்தலாம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:40, 26 சூலை 2022 (UTC)[பதிலளி]
  4. ஒரு நாள் போதுமென்பதே எனது கருத்தும்.--Balu1967 (பேச்சு) 09:24, 26 சூலை 2022 (UTC)[பதிலளி]
  5. ஒரு நாள் போதும் என்பது என் கருத்து--நேயக்கோ (பேச்சு) 00:32, 23 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

இடைக்கால முடிவு: 24 மணி நேர மாரத்தான் என்பது பலராலும் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி திட்டமிடலாம். இதில் எவருக்கேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:31, 15 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

24 மணி நேரம் என்ற முடிவு ஏற்புடையது இரா.முத்துசாமி (பேச்சு) 14:14, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

இறுதி முடிவு: வேறு மாற்றுக் கருத்துகள் இல்லாததால், 24 மணி நேர மாரத்தான் என முடிவாகியுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:32, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

துப்புரவு / மேம்படுத்துதல் தொகுப்புகளுக்கான பரிந்துரைகள்[தொகு]

திட்டப் பக்கத்தில் சில துப்புரவுப் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவையோடு வேறு எந்தெந்த பணிகளை செய்யவேண்டும் என்பது குறித்தான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:23, 18 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

தேவைப்படும் தொழினுட்ப உதவிகள்[தொகு]

  1. விக்கிதானுலாவியை இயக்குவது எப்படி? - எளிதில் புரியக்கூடிய வகையில் விளக்கமான வழிமுறைக் கையேடு மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:52, 17 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
    இங்கு 4 நிகழ்படங்கள் உருவாக்கி உள்ளேன். இது விக்கிமூலத்தில் பயன்படக் கூடியவை. சில மாற்றங்கள் செய்தால் விக்கிபீடியாவிலும் பயன்படுத்தலாம். ஸ்ரீதர். ஞா (✉) 07:43, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
    @Sridhar G: நிகழ்படங்களை இன்று பார்க்கிறேன்; பரிந்துரைக்கு நன்றி. விக்கிமூலத்தில், இப்பக்கத்தின் தலைப்பில் விக்கிதானுலாவி என பிழையாக உள்ளது. திருத்தம் செய்ய உதவவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:01, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
    @Sridhar G: மகிழ்ச்சியான தகவல்:- விக்கிதானுலவியை கடந்த வாரம் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். பயன்படுத்தி வருகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:07, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  2. CS1 maint, CS1 errors ஆகிய (பகுப்பில் தோன்றும்) பிழைகளை களைய தொழினுட்ப வல்லுனர்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:14, 22 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
  3. மாரத்தான் நிகழ்விற்கு முதல் நாள் பகுப்பு:பகுப்பில்லாதவை எனும் பக்கத்தை இற்றை செய்யவேண்டும்.
  4. இந்த சிறப்புப் பக்கத்தில் தேவைப்படும் உதவிகள்:
    1. மொத்தம் எத்தனைப் பக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன என அறிந்துகொள்ளும் வகையில் பக்கத்தை வடிவமைத்தல் நன்று.
    2. எண் மற்றும் அகர வரிசையில் இருக்கிறது; ஆனால், ஒரு 'தாய் பகுப்புப் பக்கத்தில்' இருப்பதைப் போன்று 'அ' என்பதற்குக் கீழ் பட்டியல், 'ஆ' என்பதற்குக் கீழ் பட்டியல் என இருந்தால்... கையாளுவதற்கு எளிது.
  5. வேண்டிய பகுப்புகள், வேண்டிய பக்கங்கள் ஆகிய பக்கங்களில் தேவைப்படும் உதவி:
    ஒரு 'தாய் பகுப்புப் பக்கத்தில்' இருப்பதைப் போன்று 'அ' என்பதற்குக் கீழ் பட்டியல், 'ஆ' என்பதற்குக் கீழ் பட்டியல் என இருந்தால்... கையாளுவதற்கு எளிது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:39, 2 செப்டம்பர் 2022 (UTC)

பரிந்துரை[தொகு]

திட்டப்பக்கத்தில் (பரிந்துரைக்கப்படும் துப்புரவு / மேம்படுத்துதல் தொகுப்புகள்) உள்ள 10 இலக்குகள் மிக அதிகம்போல் உள்ளன. 5 வது பரிந்துரையான கூகுள் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளை செம்மைப்படுத்தல் என்பதை மட்டும் செய்தால் என்ன? அடுத்த கட்டமாக மிகுதியானவற்றைச் செய்யலாம். 2009 இல் தொடங்கிய கூகுள் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் 10 வருடங்களுக்கு மேலாக தேங்கியிருப்பது உறுத்தலாகவுள்ளது. AntanO (பேச்சு) 08:26, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

வணக்கம். தங்களின் பரிந்துரைக்கு நன்றி!
  1. "துப்புரவு உள்ளிட்ட மேம்படுத்துதல் பணியை செய்ய வேண்டும்" எனக் கருதிய தொடர் பங்களிப்பாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த மாரத்தான் திட்டமிடப்பட்டது. திட்டப் பக்கத்தின் வரைவினை தயாரித்தபோது, துப்புரவுப் பணியை கவனக்குவியமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டது. வரைவினை விரிவாக்கியபோது -- 5 ஆண்டுகள் நடக்காது இருந்த ஒரு நிகழ்வினை இப்போது நடத்தும்போது… இறுக்கமான வேண்டுகோள்கள் வேண்டாம் எனக் கருதி, பரிந்துரைகளாக சில பணிகளை பட்டியலிட்டேன். "அவரவருக்கு விருப்பமான துப்புரவுப் பணிகளை செய்யலாம்" என்பதாக தளர்த்துதலே இவ்வாறு செய்ததன் காரணம்.
  2. விக்கி மாரத்தான் என்பது குறித்த புரிதலை அண்மைக்கால பயனர்களிடையே ஏற்படுத்த வேண்டிய நிலையும் உணரப்பட்டது. எனவே // பயனர்கள் தமக்கு விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம். இவ்வாண்டு மாரத்தானில், துப்புரவு உள்ளிட்ட மேம்படுத்துதல் பணிகளை முதன்மையாகக் கருதி தொகுக்குமாறு பயனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்// என உரை மாற்றப்பட்டது.
  3. வரைவு தயாரிக்கப்பட்டபோது, கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை மேம்படுத்தும் பணியானது பட்டியலிடப்படவில்லை. அண்மையில் நடந்த விக்கிமேனியா 2022 நிகழ்வில் பேசிய தொடர் பங்களிப்பாளர்கள் அனைவருமே 'கூகுள் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள்' குறித்து தமது கவலைகளை தெரிவித்தனர். அதன் பிறகே இப்பணியினை பட்டியலில் சேர்த்தேன்.
  4. இலக்குகள் என்பது வேறு பொருளில் புரிந்துகொள்ளப்படும் என்பதால், கவனக்குவியம் (focus) என இப்போது பெயர்மாற்றம் செய்துள்ளேன்.
  5. தங்களின் பரிந்துரையை உடனடியாக கவனத்திற் கொண்டு, பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு கொண்டு வந்துள்ளேன். இதன் மூலமாக, இப்பணியானது கூடுதல் கவனம் பெறும் என நம்புகிறேன். (2017 ஆம் ஆண்டு திட்டமாகிய தமிழக ஆசிரியர்கள் பங்களித்த கட்டுரைகள் துப்புரவு மூன்றாம் இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது).
  6. கூகுள் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளை செம்மைப்படுத்த தனியாக 'ஒரு வாரம்' அல்லது 'ஒரு மாதம்' என சிறப்பாக அறிவித்து செய்யலாம் என்பது எனது பரிந்துரை.
  7. மற்றவர்களின் கருத்துகளையும் அறிந்துகொண்டு முடிவு செய்யலாம் எனக் கருதுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:52, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்

  • கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்: எவ்வாறு மேம்படுத்துவது என வரையறுக்கலாம். இவற்றை மேம்படுத்தும்போது 100% உள்ளடக்கமும் மேம்படுத்ததாது 300 - 500 சொற்கள் கொண்ட கட்டுரையாக மேம்படுத்தினாலே போதும் எனலாம்.
  • 2017 ஆம் ஆண்டு தமிழக ஆசிரியர்கள் பங்களித்த கட்டுரைகள்: கட்டாயம் முடிக்க வேண்டிய பணி.
  • //கூகுள் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளை செம்மைப்படுத்த தனியாக 'ஒரு வாரம்' அல்லது 'ஒரு மாதம்' என சிறப்பாக அறிவித்து செய்யலாம் என்பது எனது பரிந்துரை. // நல்ல யோசனை.

--AntanO (பேச்சு) 15:48, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

{{திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகள்}} இதுபோன்ற ஊராட்சிகள் வார்ப்புருக்களில் உள்ள சிவப்பு இணைப்புகளை சரிசெய்தால் (உருவாக்கல் / சரியான இணைப்பை ஏற்படுத்தல்) வேண்டிய பக்கங்கள் துப்புரவு குறைந்துவிடும். --AntanO (பேச்சு) 15:56, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

இதனையும் பட்டியலில் சேர்த்துவிடுகிறேன். இதைப் போன்று வேறு பரிந்துரைகள் இருப்பின் இதே பேச்சுப் பக்கத்தில் 'துப்புரவு / மேம்படுத்துதல் தொகுப்புகளுக்கான பரிந்துரைகள்' எனும் தலைப்பின்கீழ் இட்டு உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:08, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
@AntanO: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியை முதல் பரிந்துரையாக பட்டியலில் காட்டியுள்ளோம்.இப்பணியை செய்வதற்கான வழிகாட்டல்களும் / நெறிமுறைகளும் தொகுக்கப்பட்டு, இறுதிநிலையை அடையவுள்ளன; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
👍 விருப்பம்--AntanO (பேச்சு) 11:10, 19 செப்டம்பர் 2022 (UTC)

சென்னை சந்திப்பு[தொகு]

மாரத்தானையொட்டி செப்டம்பர் 17 அல்லது 18 இல் சென்னையில் ஒரு சந்திப்பினை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இது வரை வெகுசில பயனர்களே (7) ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனவே பயனரல்லாத புதியவர்களையும் சேர்த்துக் கொள்ளலாமா? புதியகட்டுரைகள் உருவாக்கப் போவதில்லை. உள்ளவற்றைப் பிழைதிருத்த உள்ளதால் சிக்கலில்லை என நினைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 03:02, 30 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

புதியவர்களை சேர்த்துக் கொள்வோம். சிறிய அளவிலான சந்திப்பு என்பதால், அடிப்படை விடயங்களை கற்றுக் கொடுத்தல் எளிதாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:11, 30 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

அண்ணா பல்கலைக் கழகத்தின் AU-KBC வளாகத்தின் கணினி அரங்கினைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளனர். https://www.au-kbc.org/ கணினியுடன் இருப்பதால் இது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்களுடன் இணைந்து இச்சந்திப்பினை நடத்தும் போதும் இன்னும் பலரைப் போய்ச்சேரும். செப்டம்பர் 17 சனிக்கிழமை "விக்கி மாரத்தான் பயிலரங்கு" என்ற தலைப்பில் நடத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 06:50, 6 செப்டம்பர் 2022 (UTC)

👍 விருப்பம் --SelvasivagurunathanmBOT (பேச்சு) 10:29, 6 செப்டம்பர் 2022 (UTC)
ஏயு-கேபிசி அமைப்புடன் இணைந்து நேற்று நடந்த மாரத்தான் பயிரலங்கு நிகழ்வு நிறைவாக அமைந்தது. 52 நபர்கள் பதிவு செய்திருந்த வேளையில் சுமார் 30 நபர்கள் கலந்து கொண்டனர். காலையில் அறிமுக விளக்க உரைகளும் மாலை செயல்முறை விளக்கமும் வழங்கப்பட்டன. செல்வசிவகுருநாதன், ஸ்ரீதர், பாலு ஆகியோர் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சியளித்தனர். புதியவர்கள் சிறுசிறு திருத்தங்களும், அனுபவ கொண்டவர்கள் சில கட்டுரைகளையும் உருவாக்கினர். நிகழ்வின் படங்களை இங்கே காணலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 02:19, 18 செப்டம்பர் 2022 (UTC)
@Neechalkaran: விக்கி மாரத்தான் பயிலரங்கில் பங்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நிகழ்வின் படங்களுக்கு சரியான இணைப்புகள் கிடைக்கவில்லை.-- சா. அருணாசலம் (பேச்சு) 12:30, 24 செப்டம்பர் 2022 (UTC)

வேண்டிய பக்கங்கள்[தொகு]

வேண்டிய பக்கங்கள் என்பதில் வரிசை எண் 388-ல் உள்ள en:BirdLife International என்பதை பன்னாட்டு பறவை வாழ்க்கை என முன்னரே தமிழாக்கம் செய்துள்ளேன். எனவே இதனைச் சரி செய்வது அல்லது பட்டியலிலிருந்து நீக்குவது எப்படி. விலங்கியல் தொடர்பான பக்கங்களை உருவாக்க முயன்றுவருகின்றேன். --சத்திரத்தான் (பேச்சு) 10:47, 9 செப்டம்பர் 2022 (UTC)

எதிர்பார்ப்பு[தொகு]

50 பங்களிப்பாளர்கள், ஒவ்வொருவரும் சுமார் 100 பயனுள்ள தொகுப்புகளை செய்தால், ஒட்டுமொத்தமாக 5000 தொகுப்புகள் என்பதனை அடையலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:58, 23 செப்டம்பர் 2022 (UTC)

@Selvasivagurunathan m: விக்கி மாரத்தான் 2022 சம்மந்தப்பட்ட எல்லா ஏற்பாடுகளையும் மேற்கொண்ட தங்களுக்கு என் வாழ்த்துகள். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 12:26, 24 செப்டம்பர் 2022 (UTC)