தொல்காப்பிய அகத்தியம் உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகத்தியர், தொல்காப்பியர் ஆகியோர் தமிழுக்கு இலக்கணம் செய்த புலவர்கள். இவர்களைப் போலவே தொல்காப்பிய அகத்தியம் உடையார் என்னும் புலவரும் இலக்கணம் செய்தவர். யாப்பருங்கலம் நூலின் விருத்தியுரை இவரைக் குறிப்பிட்டு இவரது நூற்பா ஒன்றனை மேம்கோளாகக் காட்டுகிறது. [1]

வாகை பாடாண் பொதுவியல் திணை எனப்
கோகிய மூன்றும் புறப்புறப் பொருளே

என்பது இவர் நூற்பா.

புறப்பொருள் வெண்பாமாலை நூல் காட்டும் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை - என்னும் ஏழு திணைகளும் புறத்திணைகள். இவற்றை அடுத்து அந்த நூலில் காட்டப்பட்டுள்ள வாகைத்திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை ஆகிய மூன்று திணைகளை இந்த நூற்பா புறப்புறம் என்று பிரித்துக் காட்டுகிறது.

தொல்காப்பியத்தில் இத்தகைய பாகுபாடு இல்லை. எனவே இந்தத் தொல்காப்பிய அகத்தியம் உடையார் காலம் புறப்பொருள் வெண்பாமாலை காலத்துக்குப் பிற்பட்டது.

மேற்கோள்[தொகு]

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 436