வாழப்பள்ளி செப்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழப்பள்ளி செப்பேடு (கி.பி 9 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டு)
வாழப்பள்ளி மகா சிவன் கோவில்
தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் சேரமான் பெருமாள் நாயனாரின் உருவம்

வாழப்பள்ளி செப்பேடு (Vazhappally copper plate, கி.பி. 882/83 கி.பி. [1] ) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வாழப்பள்ளியில் கிடைத்த செப்பேடாகும். இது மலையாள மொழியில் எழுதப்பட்ட செப்பேடு என கேரள அறிஞர்கள் கூறுகின்றனர். [2] [3] அண்மைய ஆய்வின்படி இதன் காலம் கி. பி 882/83 என்று தெரியவருகிறது. [4]

ஒரே செப்பேட்டின் இரு பக்கங்களிலும் (பக்கத்துக்கு ஐந்து வரிகளுடன்) சில கிரந்த எழுத்துக்களுடன் வட்டெழுத்து வடிவத்தில் மலையாளத்தின் ஆரம்ப வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது எனப்படுகிறது. செப்பேட்டின் உள்ளடக்கம் முழுமையற்றதாக உள்ளது. [2] இந்த செபேடு சங்கனாச்சேரிக்கு அருகில் உள்ள தலமணா இல்லத்தில் இருந்து வி. சிறீனிவாச சாஸ்திரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. [5] இந்த செப்பேடு திருவல்லா மூவிடத்து மடத்திற்கு சொந்தமானது. [2]

இந்த செப்பேடு சேர பெருமாள் மன்னன் இராம ராஜசேகரனின் (கி.பி. 882/83) பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. [4]

  • இராஜசேகர மன்னன் "ஸ்ரீ, ராஜா ராஜாதிராஜ, பரமேஸ்வர பட்டாரக, ராஜசேகர தேவர்" மற்றும் "பெருமாள் அடிகள்" என்று விவரிக்கப்படுகிறார். [2]
  • திருவாட்டுவாய் பதினெட்டு நாட்டாரும் வாழைப்பள்ளி ஊராரும் கூடி மன்னர் ராஜசேகரன் முன்னிலையில் திருவட்டுவாய் கோயிலில் தினசரி வழிபாட்டிற்கு நிலம் வழங்குவது தொடர்பாக கோயில் குழுவினரின் முடிவு குறித்து செப்பேடு விவரிக்கிறது. [2] [4]
  • கோயிலில் நாள் வழிபாட்டுக்கு இடையூறு செய்பவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. [2]
  • இச்செப்பேடு வழக்கமாக "ஸ்வஸ்தி ஸ்ரீ" என்று தொடங்குவதற்கு பதில் "நமச்சிவாய" என்று துவங்குவது புதுமை. [2]
  • செப்பேடு "தினாரா" என்ற நாணயத்தையும் குறிப்பிடுகிறது. [2]

வாழப்பள்ளி செப்பேட்டில் உள்ள வட்டெழுத்துக்கள், ஜட்டில வர்மன் பராந்தக பாண்டியனின் சென்னை அருங்காட்சியகச் செப்பேட்டுடன் ஒத்து உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஏட்டில் உள்ள கிரந்த எழுத்துக்கள் காசாகுடி மற்றும் பிற ஆரம்பகால பல்லவ மானியங்களின் பிந்தைய தன்மையைக் கொண்டுள்ளது. இந்த ஏடு கொல்லம் சிரியன் செப்பேடு (கி.பி 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) எழுத்துகள் மற்றும் மொழியை ஒத்திருக்கிறது. [6] [5]

சேர பெருமாள் மன்னன் இராஜசேகரன் பொதுவாக சைவ ( நாயன்மார் ) புலவர்-பாடகர் சேரமான் பெருமாள் நாயனாருடன் இணைத்து அறிஞர்களால் அடையாளம் காணப்படுகிறார். [7]

வரிகள்[தொகு]

பொருள்[தொகு]

"வாழப்பள்ளி முருகன் கோவிலில் நித்ய நிதானம் சரியாக தொடரவில்லை என்றால், சேர பேரரசர் குலசேகர ராஜசேகரப் பெருமான் இதற்குக் காரணமானவர்களுக்கு தண்டம் விதித்து தண்டிப்பார்"

Travancore Archaeological Series (Volume II, Part II)

குறிப்புகள்[தொகு]

  1. Devadevan, Manu V. (2020). "Changes in Land Relations and the Changing Fortunes of the Cēra State". The 'Early Medieval' Origins of India. Cambridge University Press. பக். 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108494571. https://books.google.com/books?id=exzhDwAAQBAJ&q=The+%E2%80%98Early+Medieval%27+Origins+of+India. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 435.
  3. Veluthat, Kesavan. "The Temple and the State in Medieval South India." Studies in People’s History, vol. 4, no. 1, June 2017, pp. 15–23.
  4. 4.0 4.1 4.2 'Changes in Land Relations during the Decline of the Cera State,' In Kesavan Veluthat and Donald R. Davis Jr. (eds), Irreverent History:- Essays for M.G.S. Narayanan, Primus Books, New Delhi, 2014. 58.
  5. 5.0 5.1 Rao, T. A. Gopinatha. Travancore Archaeological Series (Volume II, Part II). 8-14.
  6. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 63-64.
  7. Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 143.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழப்பள்ளி_செப்பேடு&oldid=3481461" இலிருந்து மீள்விக்கப்பட்டது