அமுதாவும் அன்னலட்சுமியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமுதாவும் அன்னலட்சுமியும்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
காதல்
எழுத்துமித்ரா அழகுவேல்
இயக்கம்எஸ்.ஜீவராஜன்
நடிப்பு
இசைரக்ஷித்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்100
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அன்வர்
அன்சர்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்அப்துல்லா புரொடக்ஷன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்4 சூலை 2022 (2022-07-04) –
ஒளிபரப்பில்
வெளியிணைப்புகள்
இணையதளம்

அமுதவும் அன்னலட்சுமியும் என்பது 4 ஜூலை 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப பின்னணியைக் கொண்ட காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இதில் கண்மணி மனோகரன் ராஜஸ்ரீ மற்றும் அருண் பத்மநாபன் நடித்துள்ளனர்.[2][3]

கதைச் சுருக்கம்[தொகு]

சிறுவயதிலே அம்மாவை இழந்த அமுதா தன் குடும்பத்திற்காக படிப்பை நிறுத்தி விடுகிறார். படிப்பறிவு இல்லாத காரணத்தால் பல அவமானங்களை சந்திக்கும் அமுதா கட்டினா ஒரு வாத்தியாரை தான் கல்யாணம் கட்டிக்கணும் என முடிவு செய்கிறார். பெருமையாக வாழ்ந்த அன்னலட்சுமி குடும்பத்தில் எதிர்பாராத சூழ்நிலைகளால் சரிந்து போகிறது. இதனால் தன்னுடைய மகனை வாத்தியாராக்கி குடும்ப பெருமையை மீட்டெடுக்க ஆசைப்படுகிறார். செந்தில் தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக வேலை செய்கிறார். இப்படி மற்றவர்கள் கனவுக்காக மனசுல இருக்க வலிகளை மறைச்சு தானே ஆகணும் ஆனால் எவ்வளவு நாளைக்கு?

செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்ளும் அமுதா, மகனை வாத்தியார் என நினைத்து பெருமைப்படும் அன்னலட்சுமி என இருக்கும் போது உண்மை தெரிந்தால் என்னவாகும்?

நடிகர்கள்[தொகு]

முக்கிய கதாபாத்திரங்கள்[தொகு]

  • கண்மணி மனோகரன் (சுவீட்டி) - அமுதா
    • சிதம்பரத்தின் மூத்த மகள்
  • ராஜஸ்ரீ - அன்னலட்சுமி[4]
    • செந்தில், பரமு, வடிவேல் மற்றும் புவனா ஆகியோரின் தாய்
  • அருண் பத்மநாபன் - செந்தில்
    • அன்னலட்சுமியின் மூத்த மகன்

அமுதா குடும்பத்தினர்[தொகு]

  • ரவி பிரகாஷ் - சிதம்பரம்
    • அமுதா, இளங்கோ, செல்வா மற்றும் உமாவின் தந்தை
  • ஜீவா - செல்வா
    • சிதம்பரத்தின் இளைய மகன்
  • ஆனந்த கிருஷ்ணன் - இளங்கோ
    • சிதம்பரத்தின் மூத்த மகன்
    • சல்மா அருண் - நாகலட்சுமி
    • சிதம்பரத்தின் மருமகள்
  • முத்தழகி - உமா
    • சிதம்பரத்தின் இளைய மகள்

அன்னலட்சுமி குடும்பத்தினர்[தொகு]

  • ராஜ் கபூர் - மாணிக்கம்
    • அன்னலட்சுமியின் தம்பி
  • சியமந்த கிரண் - பரமேஸ்வரி
    • அன்னலட்சுமியின் மூத்த மகள்
  • முனிஷ்ராஜா - சின்னா
    • அன்னலட்சுமியின் மருமகன்
  • அக்ஷரா - புவனா
    • அன்னலட்சுமியின் இளைய மகள்
  • சத்யராஜா - வடிவேல்
    • அன்னலட்சுமியின் இளைய மகன்

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2022 3.6% 4.1%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒரே அலைவரிசையில் அமுதாவும் அன்னலட்சுமியும்.. ஜூலை 4 முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!". tamil.filmbeat.com.
  2. "அமுதாவும் அன்னலட்சுமியும் | ஜூலை 4 முதல், திங்கள் - சனி இரவு 7 மணிக்கு".
  3. "கண்டதும் காதல்... குடும்பத்துக்குள் வெடிக்கப்போகும் மோதல்...! விறுவிறுப்பாகும் சீரியல்...!". tamil.samayam.com.
  4. "நந்தாவில் அம்மா, சேதுவில் பிச்சைக்காரி, ஆனா இப்பவும் – முதல் முறையாக மனம் திறந்த நந்தா பட நடிகை. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க". tamil.behindtalkies.com.