சாகம்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகம்பரி தேவி
அதிபதிகீரை மற்றும் பழங்களின் கடவுள்
தேவநாகரிशाकम्भरी
விழாக்கள்நவராத்திரி, சாகம்பரி பூர்ணிமா (வடநாட்டில் மட்டும்)

இந்து சமயத்தில், தேவி சாகம்பரி (Shakambhari, சமசுகிருதம் : शाकम्भरी) ஆதிசக்தியின் அவதாரம் ஆவார். சாகம்பரி என்பதற்கு "மனிதகுலத்தை பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஊட்டமளித்தவர்" என்று பொருள். தேவி மகாத்மியம், தேவி பாகவதம் ஆகியவற்றில் இவர் குறிப்பிடப்படுகிறார். துர்கமாசுரன் என்ற அசுரனை அழிக்கவும் பஞ்சத்தை தீர்கக்வும் துர்க்கை சாகம்பரியாக அவதரித்ததாக தேவி மகாத்மியம் கூறுகிறது. தேவி சாகம்பரிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பல சக்தி பீடங்கள் இந்தியாவில் உள்ளன, அவற்றில் முக்கியமானவை இராசசுத்தானில் அமைந்துள்ள சக்ரே பீடம், சம்பார் பீடம்[1] மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மிகவும் பிரபலமான சகாரன்பூர் சக்தி பீடங்கள் ஆகியவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகம்பரி&oldid=3445268" இலிருந்து மீள்விக்கப்பட்டது