சாவோ தொமே மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவோ தொமே மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரிபார்மிசு
குடும்பம்: ஓரியோலிடே
பேரினம்: ஓரியோலசு
இனம்: ஓ. கிராசிரோசுட்ரிசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு கிராசிரோசுட்ரிசு
ஹார்ட்லாப், 1857
சாவோ தொமே மாங்குயில் பரம்பல்

சாவோ தொமே மாங்குயில் (São Tomé oriole)(ஓரியோலசு கிராசிரோசுட்ரிசு) அல்லது பெரும்-அலகு மாங்குயில் , ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இந்த சிற்றினத்திற்கு 1857-ல் கசுதவ் ஹார்ட்லாப் பெயரிட்டார். இது சாவோ டோம் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

பரவல்[தொகு]

இது வடகிழக்கு (சாவோ தொமே நகர்ப்புற பகுதி) தவிர, சாவோ தீவு முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது தென்மேற்கு மற்றும் மத்திய மாசிபில் மிகவும் அதிகமாக உள்ளது.[1]

அச்சுறுத்தல்கள்[தொகு]

சாவோ தொமே மாங்குயில் சாவோ தொமேமின் மீதமுள்ள தாழ் நில மழைக்காடுகளின் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 BirdLife International (2018). "Oriolus crassirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22706404A131471210. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706404A131471210.en. https://www.iucnredlist.org/species/22706404/131471210. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Kirby, Alex. "Many threatened birds 'need help'", BBC News (March 8, 2004).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_தொமே_மாங்குயில்&oldid=3477021" இலிருந்து மீள்விக்கப்பட்டது