ரசீத்தல்தீன் அமாதனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரசீத்தல்தீன் தபிப் என்பவர் ஈரானை ஆண்ட ஈல்கானரசு அரச மரபில் வரலாற்றாசிரியர் மற்றும் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார்.[1] இவர் அமாதான் என்ற இடத்தை பூர்வீகமாக உடைய பாரசீக யூத குடும்பத்தில் பிறந்தார்.

தனது 30ஆம் வயதின் போது இசுலாம் மதத்திற்கு மாறினார். ஈல்கான் கசனிடம் விசியராக (சக்தி வாய்ந்த ஆலோசகர்) பணியாற்றினார். பின்னர் மி அல்-தவரிக் நூலை எழுதுமாறு கசன் இவரைப் பணித்தார். இந்நூல் ஈல்கானரசின் காலம் மற்றும் மங்கோலியப் பேரரசின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒற்றை நூல் வளமாகக் கருதப்படுகிறது.[2] இவர் 1316ஆம் ஆண்டு வரை தனது விசியர் பதவியில் தொடர்ந்தார்.

ஈல்கானரசின் அரசனான ஒல்சைடுவுக்கு விடம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர் 1318இல் கொல்லப்பட்டார்.[2]

வரலாற்றாளர் மோரிசு ரொசபி ரசீத்தல்தீனை "விவாதத்திற்குரிய வகையிலே மங்கோலிய ஆட்சியின்போது பாரசீகர்கத்தில் இருந்த மிகப் புகழ் பெற்ற நபர்" என்று குறிப்பிடுகிறார்.[3] இவர் தொடர்ந்து பல நூல்களை எழுதினார். தப்ரீசு நகரத்தில் ரப்-இ ரசீதி என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.

வாழ்க்கை[தொகு]

ரசீத்தல்தீனின் சமி அல்-தவரிக் நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள மங்கோலிய வீரர்கள், 1305-1306.

ரசீத்தல்தீன், அமாதான் நகரத்திலுள்ள பாரசீக இயூத குடும்பத்தில் பிறந்தார். இது தற்போதைய அமாதான் மாகாணத்தில் உள்ளது. இவரது தாத்தா ஈல்கானரசை நிறுவிய ஆட்சியாளரான குலாகு கானின் அவையில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றினார். ரசீத்தல்தீனின் தந்தை அவையில் ஒரு மருந்துத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். இவர் தனது 30வது வயதின் போது இசுலாம் மதத்திற்கு மாறினார்.[4]

ரசீத் ஒரு மருத்துவராக பயிற்சி செய்தார். குலாகுவின் மகனான அபகா கானின் ஆட்சியின் போது இவர் சேவை செய்ய ஆரம்பித்தார். கசுவினுக்கு அருகிலுள்ள சுல்தானியேவில், ஈல்கானரசு அவையில் பெரிய விசியராக இவர் பதவிக்கு உயர்ந்தார். இவர் விசியர் மற்றும் மருத்துவராக ஈல்கானரசுப் பேரரசர்களான கசன் மற்றும் ஒல்சைடு ஆகியோரின் கீழ் சேவை செய்தார். அபு சயத் பகதூர் கானின் ஆட்சியின் போது இவர் அரசவைச் சூழ்ச்சிகளில் மாட்டிக் கொண்டார். அங்கிருந்த அமைச்சர்கள் இவரது 70வது வயதின் போது இவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தனர். இவரது மகன், கியாசல்தீன் இபின் ரசீத்தல்தீன் இவருக்குப் பிறகு சிறிது காலத்திற்கு விசியராகப் பணியாற்றினார்.

உசாத்துணை[தொகு]

  1. "Rashid ad-Din". Encyclopædia Britannica. 2007. Encyclopædia Britannica Online. Accessed 11 April 2007.
  2. 2.0 2.1 Morgan, D.O. (1994). "Rāshid Al-Dīn Tabīb". Encyclopaedia of Islam (2nd) 8. Brill Academic Publishers. 145–148. ISBN 9004098348. 
  3. Genghis Khan: World Conqueror? Introduction by Morris Rossabi http://www.blackwellpublishing.com/content/BPL_Images/Content_store/Sample_chapter/9780631189497/GK_sample_chap.pdf
  4. George Lane, Genghis Khan and Mongol Rule,Hackett Publishing , 2009 p.121.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசீத்தல்தீன்_அமாதனி&oldid=3597642" இலிருந்து மீள்விக்கப்பட்டது