மனேர் ஆறு

ஆள்கூறுகள்: 18°41′N 79°49′E / 18.683°N 79.817°E / 18.683; 79.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனையர் நீர்த்தேக்கம்

மனேர் ஆறு (Maner River) அல்லது மனைர் அல்லது மானேறு (மராத்தி : मानेर)(தெலுங்கு: மானேறு) என்பது இந்தியாவில் கோதாவரி ஆற்றின் துணை ஆறாகும்.[1] இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழ் மனேர் அணை, தெலங்காணா மாநிலம் கரீம்நகர் மற்றும் ராமகுண்டத்தில் உள்ள தேசிய அனல் மின் நிறுவன மின் உற்பத்தி நிலையத்திற்குக் குடிநீர் வழங்குகிறது. சிர்சில்லாவிற்கு அருகிலுள்ள மன்வாடா கிராமத்தில் நடு மனையர் அணையும், ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தின் கம்பீரப்பேட்டை மண்டலத்தில் உள்ள நர்மலா கிராமத்திற்கு அருகில் நிசாம் காலத்தில் மேல் மனைர் அணையும் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "GRMB". grmb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனேர்_ஆறு&oldid=3443156" இலிருந்து மீள்விக்கப்பட்டது