கோலா கிராய்

ஆள்கூறுகள்: 5°32′N 102°12′E / 5.533°N 102.200°E / 5.533; 102.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா கிராய்
Kuala Krai
கிளாந்தான்
2005-ஆம் ஆண்டில் கோலா கிராய்
2005-ஆம் ஆண்டில் கோலா கிராய்
கோலா கிராய் is located in மலேசியா
கோலா கிராய்
கோலா கிராய்
      கோலா கிராய்       மலேசியா
ஆள்கூறுகள்: 5°32′N 102°12′E / 5.533°N 102.200°E / 5.533; 102.200
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் கோலா கிராய் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு18xxx
தொலைபேசி எண்கள்+6-09-9
போக்குவரத்துப் பதிவெண்கள்D

கோலா கிராய் (மலாய் மொழி: Kuala Krai; ஆங்கிலம்: Kuala Krai; சீனம்: 瓜拉吉赖; ஜாவி: كوالا كراي) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; கோலா கிராய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 67 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 273 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (Kuala Lebir) என்று அழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 53 மீட்டர் (177 அடி) உயரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

கோலா கிராய் நகரத்தின் வரலாறு, 1920-ஆம் ஆண்டுகளில் கிழக்கு கடற்கரை இரயில்வே (East Coast Railway) எனும் இரயில்பாதை கட்டுமானத்தில் இருந்து தொடங்குகிறது.

அதற்கு முன், இந்தப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரே குடியேற்றம் பத்து மெங்கேபாங் (Batu Mengkebang) எனும் கிராம உட்புறப் பகுதியாகும். இந்தப் பத்து மெங்கேபாங் கிராமம், கிளாந்தான் உட்பகுதியில் மிக தொலைவில் இருந்தது. வாரத்தில் ஒரு முறைதான் ஆற்றின் வழியாகத்தான் படகுப் பயணங்கள் இருந்தன.

படகுச் சேவை[தொகு]

அந்தப் படகுச் சேவையை, டப் டிவலப்மெண்ட் ரிவர் ஸ்டீமர் (Duff Development River Steamers) எனும் பெயரில் கிளாந்தான் அரசாங்கம் நடத்தி வந்தது.[1] வாரத்திற்கு ஒரு முறை தான் கிராம மக்கள் பாசிர் மாஸ் நகரத்திற்கு வர முடியும்.

இரயில் பாதையின் திறப்பு, கிளாந்தான் மாநிலத்தின் தொலைதூர உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. கோலா கிராயில் இருந்த ஆற்றுப் போக்குவரத்து இரயில் சேவையால் முழுமையாக மாற்றம் அடைந்தது.

இப்போது நிறைய மாற்றங்கள். நகரத்திற்கு மிக அருகிலேயே நெடுஞ்சாலைகளை அமைத்து இருக்கிறார்கள். கூட்டாட்சி சாலை 8 மிக அருகில் இந்த நகரத்தைத் தாண்டிச் செல்கிறது.

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

1917 - கோலா கிராய் மருத்துவமனை திறக்கப்பட்டது.

1926 (டிசம்பர்) - நகரத்தின் வரலாற்றில் மிக மோசமான வெள்ளம். கிளாந்தான் மற்றும் அண்டை மாநிலங்களான திராங்கானு, பேராக் ஆகிய இரண்டு மாநிலங்களையும் பாதித்தது.

1930 (ஜூன் 19) - மலாயா உயர் ஆளுநர் (High Commissioner for Malaya) சர் சிசில் கிளெமெண்டியின் (Sir Cecil Clementi) வருகை.[2]

1941 டிசம்பர் 8 - ஜப்பானியப் படை கோத்தா பாருவில் தரையிறங்கியது. நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. 2-ஆவது லெப்டினன்ட் பட்டர்ஸ் (2nd Lieutenant Butters) மற்றும் அவரது இந்தியப் படை பிரிவினர் (Mahrattas) கோலா கிராய்க்குப் பின்வாங்கினர். நகரத்தை விட்டு வெளியேறும் முன், இரயில் பாதையை ஜப்பானியர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வெடிபொருட்களைப் பயன்படுத்தித் தகர்த்தனர்.[3]

1945 - போர் முடிவடைந்த உடனேயே, நேச நாட்டுப் படைகள் வருவதற்கு முன்பாக, சுமார் ஆறு மாதங்களுக்கு கம்யூனிஸ்டுகளால் கோலா கிராய் ஆளப்பட்டது.[4]

1946 - கடுமையான வெள்ளம் நகரத்தை பாதித்தது.

1961 - மினி வனவிலங்கம் (Mini Zoo) திறப்பு.

1967 (26 நவம்பர்) - கடுமையான வெள்ளம். கிளந்தான் ஆற்றின் நீர்மட்டம் 86 அடி (26 மீ) ஆக உயர்ந்தது. இது சாதாரண மட்டத்தில் இருந்து 36 அடி (11 மீ) உயரம். நகரின் பெரிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.[5]

பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி[தொகு]

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமான கிளாந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளி பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி. கோலா கிராய் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. 1945 டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி தோற்றுவிக்கப் பட்டது.

முன்பு இந்தப் பள்ளிக்கு பாசீர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Pasir Gajah Kelantan) என்று பெயர். இப்போது பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி (SJKT Pasir Gajah Kelantan) என்று மாற்றம் கண்டுள்ளது.[6]

1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கிளாந்தான் மாநிலத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் மாணவர்ப் பற்றாக்குறை. அதனால் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தேசிய மலாய்ப் பள்ளிகளாக மாற்றப் பட்டன. எஞ்சிய ஒரே ஒரு தமிழ் பள்ளிதான் இந்தப் பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி.[7]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் ஆசிரியர்கள் மாணவர்கள்
DBD7404 பாசீர் காஜா தோட்டம் SJK(T) Ladang Pasir Gajah[8] பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி 18000 கோலா கிராய் 9 36

மேற்கோள்கள்[தொகு]

  1. Shukor Rahman. "Kuala Krai, a town that owes its origin, growth to the railway". scanned local newspaper cutting, probably dating from the early 1970s. பார்க்கப்பட்ட நாள் 5 May 2007.
  2. Janus project. "Photograph collection of the British Association of Malaysia and Singapore". Janus catalogue. பார்க்கப்பட்ட நாள் 9 December 2006.
  3. Lieutenant Colonel Edward De Santis (2001). "Major Michael Delmé-Radcliffe". Ubique. பார்க்கப்பட்ட நாள் 14 December 2006.
  4. Butz, William; DaVanzo, Julie (1995). "First Malaysian Family Life Survey, 1976-1977; 2nd (ICPSR) version". RAND, Santa Monica, CA. பார்க்கப்பட்ட நாள் November 26, 2017.
  5. "Major Floods". Bernama Library and Infolink Service. 2004. Archived from the original on 1 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2006.
  6. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  7. At the beginning of 1980’s there were only 3 Tamil Schools in Kelantan. In 1990’s, 2 Tamil Schools converted to national schools (SK) and only SJK Ladang Pasir Gajah remained as the one and only Tamil school in Kelantan.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "பாசிர் காஜா தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_கிராய்&oldid=3934530" இலிருந்து மீள்விக்கப்பட்டது