ஆர். தர்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். தர்மர்
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2022
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ஆர். தர்மர் (R. Dharmar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினரும் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், புளியங்குடி கிராமம் இவருடைய சொந்த ஊராகும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மறவர் இனத்தைச் சேர்ந்தவராவார்.[1][2][3]

1987-ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த தர்மர் கிளைச் செயலாளர், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், முதுகுளத்தூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர், 4 முறை ஒன்றிய கவுன்சிலர், 2 முறை நிலவள வங்கித் தலைவர் என பதவிகள் வகித்துள்ளார். தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் 2020 ஆம் ஆண்டு முதல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 2022-ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chidambaram and five others to be elected unopposed to RS". டெக்கன் ஹெரால்டு. 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  2. "Shanmugam, Dharmar are AIADMK RS candidates". Julie Mariappan. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 May 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  3. "AIADMK names Shanmugham, Dharmar as candidates for RS bypolls". DT next. 25 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
  4. அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் - யார் இந்த ஆர்.தர்மர்?
  5. யார் இந்த தர்மர்? அதிமுக ராஜ்யசபா எம்.பி வாய்ப்பு எப்படி கிடைத்தது?
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._தர்மர்&oldid=3743911" இலிருந்து மீள்விக்கப்பட்டது