கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 25°15′49″N 51°26′53″E / 25.26361°N 51.44806°E / 25.26361; 51.44806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம்
Khalifa International Stadium
தோகா கலீஃபா அரங்கில் பிரேசில் மற்றும் அர்கெந்தினா அணிகள் விளையாடிய போட்டி
அமைவிடம்தோகா, கத்தார்
ஆட்கூற்றுகள்25°15′49″N 51°26′53″E / 25.26361°N 51.44806°E / 25.26361; 51.44806
உரிமையாளர்கத்தார் கால்பந்து சங்கம்
இருக்கை எண்ணிக்கை45,416[1]
தரைப் பரப்புபுல்
Construction
திறக்கப்பட்டது1976
சீரமைக்கப்பட்டது2005, 2014–2017
வடிவமைப்பாளர்தர் அல்-அந்தாசா [2]
Main contractorsமிட்மேக் கட்டுமான நிறுவனம் உள்ளிட்டோர்
குடியிருப்போர்
கத்தார் தேசிய கால்பந்து அணி (1976–முதல்)
2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க நாளில் வானவேடிக்கை

கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் (Khalifa International Stadium) கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைந்துள்ளது. இப்பல்நோக்கு விளையாட்டரங்கம் தேசிய விளையாட்டரங்கம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கமானது 250 எக்டேர் பரப்பளவுள்ள தோகா விளையாட்டு நகர வளாகத்தின் ஒரு பகுதியாகும். கத்தார் நாட்டு தடகள வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசுபையர் அகாடமி, நீச்சல் குள வளாகமான அமாத் நீரியல் மையம், 300 மீட்டர் உயரம் கொண்ட வானளாவியான ஆசுபையர் கோபுரம் போன்றவையும் தோகா விளையாட்டு நகர வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

கத்தாரின் முன்னாள் அமீர் கலீஃபா பின் அமத் அல் தானியின் நினைவாக விளையாட்டரங்கம் கலீபா பெயரால் அழைக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இங்கு நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு உலகளாவிய நிலைத்தன்மை மதிப்பீட்டு அமைப்பானது கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கத்திற்கு நான்கு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது. உலகிலேயே முதல் முறையாக இந்த மதிப்பீட்டை அவ்வமைப்பு வழங்கியது.[3] இவ்விளையாட்டரங்கத்தில் 30000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

வரலாறு[தொகு]

1976 ஆம் ஆண்டு கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது.[4][5][6] 1992 ஆம் ஆண்டில் இங்கு 11 ஆவது வளைகுடா கோப்பையின் 15 ஆட்டங்கள் நடைபெற்றன. கத்தார் இறுதியாக முதலிடம் பிடித்து முதலாவது குழிப்பந்துக் கோப்பையை வென்றது.[7][8]

2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக 2005 ஆம் ஆண்டு விளையாட்டரங்கம் புதுப்பிக்கப்பட்டது. இதனால் விளையாட்டரங்கின் திறனான 20,000 பார்வையாளர்கள் என்ற நிலை விரிவாக்கப்பட்டு 40,000 பார்வையாளர்கள் என்ற நிலைக்கு அதிகரித்தது. மைதானத்தின் மேற்குப் பகுதியை ஒரு கூரை மூடியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய அலங்கார வளைவு உள்ளது. 2006 ஆசிய விளையாட்டு தொடக்க விழாவின் போது வானவேடிக்கைகளை நடத்த ஒரு தளமாக இவ்வளைவு பயன்படுத்தப்பட்டது.[9]

2005 ஆம் ஆண்டு அரங்கம் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு பெரும்பாலும் கால்பந்து சங்கங்களின் கால்பந்து போட்டிகள் மட்டுமே இங்கு நடைபேற்றன. ஆனால் இங்கு பல விதமான விளையாட்டுகளுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1997 ஆம் ஆண்டு முதல் அரங்கத்தில் தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கத்தார் நாட்டின் தேசிய கால்பந்து அணிக்கு இது சொந்த மைதானமாகும். 2011 ஆம் ஆண்டு பான் அரபு விளையாட்டுகளின் 6 ஆட்டங்கள் இங்கு நடைபெற்றன. குழுநிலையில் கத்தார் தேசிய அணியின் அனைத்து போட்டிகள், போட்டியின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன.[10]

மற்றொரு மறுவடிவமைப்புக்குப் பிறகு, அரங்கம் 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது.[11] 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டிகளின் தளமாக கலிஃபா விளையாட்டு அரங்கம் திகழ்ந்தது.[12]

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 அன்று, இங்கு முக்கியமான இரண்டு 2019 பிபா சங்க உலகக் கோப்பை போட்டிகளுக்கான இடமாகத் திட்டமிடப்பட்டது: ஐந்தாவது இடத்திற்கான போட்டியும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் ஓர் அரையிறுதிப் போட்டிகள் இங்கு நடைபெற்றன.[13][14] 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டரங்கத்தின் பார்வையாளர்கள் அமரும் திறன் 68,000 பேராக உயர்த்த திட்டமிடப்பட்டது.[15]

2022 உலகக் கோப்பை போட்டிக்கான விளையாட்டரங்குகள் கட்டுமானம்[தொகு]

பன்னாட்டுக் கால்பந்தாட்டக் கழகங்கள் கூட்டமைப்பின் உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளன. இதற்காக எட்டு விளையாட்டரங்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கலிஃபா பன்னாட்டு விளையாட்டரங்கும் ஒன்றாகும்.[16] போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் முதலாவதாக கட்டி முடிக்கப்பட்டதும் கலிஃபா அரங்கமேயாகும்.[17][18]

நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள்[தொகு]

  • 17 ஆவது அராபியக் குழிப்பந்து கோப்பை போட்டிகள்
  • 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
  • ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு போட்ட்டிகளின் சில போட்டிகள்
  • 2011 பான் அராபிய விளையாட்டுகள்
  • 2019 உலக தடகளப் போட்டிகள்
  • 24 ஆவது அராபியக் குழிப்பந்து கோப்பை போட்டிகள்
  • 2019 பிஃபா வின் ஐந்து போட்டிகள்
  • 2021 பிஃபா அராபியக் கோப்பைப் போட்டிகள்
  • 2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள்

சமீபத்திய போட்டி முடிவுகள்[தொகு]

2011 ஆசியக் கூட்டமைப்பு ஆசியக் கோப்பை[தொகு]

நாள் நேரம்(கத்தார்) அணி #1 முடிவு அணி #2 சுற்று
7 சனவரி 2011 19:15  கத்தார் 0–2  உஸ்பெகிஸ்தான் 2011 ஆசியக் கோப்பை குழு ஆட்டங்கள்
12 சனவரி 2011 19:15  சீனா 0–2  கத்தார்
16 சனவரி 2011 19:15  கத்தார் 3–0  குவைத்
21 சனவரி 2011 19:25  உஸ்பெகிஸ்தான் 2–1  யோர்தான் 2011 ஆசியக் கோப்பை காலிறுதியாட்டம்
25 சனவரி 2011 19:25  உஸ்பெகிஸ்தான் 0–6  ஆத்திரேலியா 2011 ஆசியக் கோப்பை அரை-இறுதியாட்டம்
29 சனவரி 2011 18:00  ஆத்திரேலியா 0–1  சப்பான் 2011 ஆசியக் கோப்பை இறுதியாட்டம்

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

நட்புக்கானவை[தொகு]

நாள் நேரம்(கத்தார்) அணி #1 முடிவு. அணி #2
2009-11-14 19:15  பிரேசில் 1–0  இங்கிலாந்து
2010-11-17 19:15  பிரேசில் 0–1  அர்கெந்தீனா
2010-11-18 18:00  கத்தார் 0–1  எயிட்டி
2010-12-16 18:00  கத்தார் 2–1  எகிப்து
2010-12-22 16:00  கத்தார் 2–0  எசுத்தோனியா
2010-12-28 19:15  கத்தார் 0–0  ஈரான்
2013-02-06 21:00  எசுப்பானியா 3–1  உருகுவை
2018-09-07 19:00  கத்தார் 1–0  சீனா
2018-09-11 19:00  கத்தார் 3–0  பலத்தீன்
2018-12-31 20:00  கத்தார் 1–2  ஈரான்

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIFA.com". Archived from the original on 2021-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-04-02.
  2. "Official website". Archived from the original on 2021-11-20. பார்க்கப்பட்ட நாள் 2022-04-02.
  3. FIFA.com (2017-11-28). "Khalifa International Stadium receives major sustainability award" (in en-GB). FIFA.com இம் மூலத்தில் இருந்து 2018-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180507051055/http://www.fifa.com/worldcup/news/y=2017/m=11/news=khalifa-international-stadium-receives-major-sustainability-award-2921733.html. 
  4. "В Катаре началась продажа билетов на Чемпионат мира по легкой атлетике 2019 года". fingazeta.ru. 28 August 2019. Archived from the original on 30 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Everything you need to know about Qatar's new Khalifa International Stadium". iloveqatar.net. 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 3 December 2021.
  6. "The Al-Khalifa International – an icon among Qatar's 2022 World Cup venues". en.as.com. 8 July 2020. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  7. "Gulf Cup 1992 (in Doha, Qatar)". rsssf.com. 20 June 2007. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020.
  8. "When Qatar left a mark at Arabian Gulf Cup". gulf-times.com. 24 November 2019. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020.
  9. "Khalifa International Stadium". worldstadia.com. 13 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
  10. "Archived copy". Archived from the original on 11 திசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. "Revamped 2022 Khalifa Stadium now set to host fans". constructionweekonline.com. 17 May 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  12. "Qatar's iconic sports venue - The Khalifa International Stadium". thepeninsulaqatar.com. 25 September 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  13. "Education City Stadium to host FIFA Club World Cup Qatar 2019™ final". FIFA. Archived from the original on 30 September 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  14. "Tracks worlds stadium in Qatar to host Club World Cup games". The Washington Post. Archived from the original on 4 October 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  15. "FIFA World Cup Qatar 2022 stadiums: A guide". timeoutdoha.com. 29 April 2020. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
  16. "Qatar 2022: Football World Cup stadiums at a glance". aljazeera.com. 18 December 2020. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
  17. "Khalifa International Stadium reinforces Qatar's national vision". en.as.com. 20 January 2021. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
  18. "Get To Know The 2022 Qatar World Cup Stadiums". archdaily.com. 2 August 2018. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.

புற இணைப்புகள்[தொகு]