கோம்பாக் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோம்பாக் ஆறு
Gombak River
Sungai Gombak
கோம்பாக் ஆறு (இடது) கிள்ளான் ஆறு (வலது) கோலாலம்பூரில் இணைகின்ற இடம்]].
அமைவு
நாடுசிலாங்கூர் & கோலாலம்பூர், மலேசியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுGunung Bunga Buah
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
கோலாலம்பூர் ஜாமிஃ பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் கிள்ளான் ஆற்றுடன் கோம்பாக் ஆறு சங்கமிக்கின்றது
நீளம்27 km (17 mi)[1]
வடிநில அளவு122 km2 (47 sq mi)[1]

கோம்பாக் ஆறு (மலாய்: Sungai Gombak; ஆங்கிலம்: Gombak River) என்பது மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வழியே பாயும் ஓர் ஆறு ஆகும். கோம்பாக் ஆறு, கிள்ளான் ஆற்றுடன் சேரும் கிளையாறு ஆகும்.[2]

இந்த இரண்டு ஆறுகளும் சந்திக்கும் இடமே கோலாலம்பூர் எனும் பெயருக்கும் பிறப்பிடமானது. மலாய் மொழியில் கோலா என்றால் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஒன்று சேரும் இடம் என்று பொருள். லும்பூர் என்றால் சேறு அல்லது சகதி என்று பொருள்.

முன்பு காலத்தில் கோம்பாக் ஆறு, சுங்கை லும்பூர் என அழைக்கப்பட்டது. அதனாலேயே குவாலா லும்பூர் என்றும் கோலாலம்பூர் என்றும் இந்த நகரம் பெயர் பெற்றது.[3]

கோபாக் ஆற்றுப் படுகையில் உள்ள இடங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய ஆறுகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 STORMWATER MANAGEMENT AND ROAD TUNNEL (SMART)An Underground Approach to Mitigating Flash Floods:[1]
  2. "Gombak River, river has its source somewhere in Selangor, and flows down to Kuala Lumpur, where it flows into the Klang River at the famous confluence marked by the Jamek Mosque of Kuala Lumpur. The river was formerly known as Sungai Lumpur, meaning "muddy river", and thus can be said to have given the capital its name, for its confluence would be "Kuala Lumpur", meaning "muddy confluence" or "muddy estuary"". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
  3. "Kuala Lumpur lies in hilly country astride the confluence of the Kelang and Gombak rivers; its name in Malay means "muddy estuary."". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்பாக்_ஆறு&oldid=3705656" இலிருந்து மீள்விக்கப்பட்டது