கிருஷ்ண மோகன் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ண மோகன் சேத்
2வது [[சத்தீசுகர் ஆளுநர்]]
பதவியில்
2 சூன் 2003 – 25 சனவரி 2007
சத்தீஸ்கர் முதலமைச்சர்அஜித் ஜோகி
ரமன் சிங்
முன்னையவர்தினேஷ் நந்தன் சாகே
பின்னவர்ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
மத்திய பிரதேச ஆளுநர் (பொறுப்பு)
பதவியில்
2 மே 2004 – 29 சூலை 2004
மத்திய பிரதேச முதலமைச்சர்உமா பாரதி
முன்னையவர்இராம் பிரகாசு குப்தா
பின்னவர்பல்ராம் சாக்கர்
9வது திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
23 சூன் 2000 – 31 மே 2003
திரிபுரா முதலமைச்சர்மாணிக் சர்க்கார்
முன்னையவர்சித்தேஷ்வர் பிரசாத்
பின்னவர்தினேஷ் நந்தன் சாகே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிபுரா ஆளுநர்
19 திசம்பர் 1939 (1939-12-19) (அகவை 84)
அலகாபாத், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்பொழுதுஉத்தரப்பிரதேசம், இந்தியா)
இறப்புதிரிபுரா ஆளுநர்
இளைப்பாறுமிடம்திரிபுரா ஆளுநர்
துணைவர்வீணா
பிள்ளைகள்2
பெற்றோர்
  • திரிபுரா ஆளுநர்

கிருஷ்ண மோகன் சேத் (Krishna Mohan Seth) இந்தியத் தரைப்படையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்று சத்தீசுகர், மத்திய பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் ஆளுநராக பணிபுரிந்தவர் ஆவார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

கிருஷ்ண மோகன் சேத் டிசம்பர் 19, 1939 அன்று அலகாபாத்தில் பிறந்தார்.[1] இவருக்கு வீணா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இராணுவ பணி[தொகு]

லெப்டினன்ட் ஜெனரல் சேத் இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் நியமிக்கப்பட்டார். இவர் மார்ச் 1979 மற்றும் அக்டோபர் 1980 க்குஇடையில்[2] (வான்குடை) படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கினார்.

இவர் போபாலில் 21வது தாக்குதல் படைப்பிரிவினை வழிநடத்தியவர்.[3] இதைத் தொடர்ந்து அக்டோபர் 1994 மற்றும் அக்டோபர் 1995க்கு இடையில் நாகாலாந்தில் 3வதுப் படைப்பிரிவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] பின்னர் துணை தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டார். சேத் 31 திசம்பர் 1997 அன்று இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சேத் 23 சூன் 2000 முதல் 31 மே 2003 வரை திரிபுராவின் ஆளுநராக இருந்தார்.[6] இதைத் தொடர்ந்து 2 சூன் 2003 முதல் 25 சனவரி 2007 வரை சத்தீசுகர் ஆளுநராகப் பதவி வகித்தார். சத்தீசுகரின் காங்கரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடர்வன போர் பள்ளியானது, இவரது ஆட்சிக் காலத்தில் இவரது சிந்தனையின் அடிப்படையில் உருவானது.[7]

சத்தீசுகரின் ஆளுநர் ஸ்ரீ கிருஷ்ண மோகன் சேத், 3 சூன் 2004 அன்று சத்தீசுகரின் ராய்ப்பூரில் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தார்.

இவர் 2 மே 2004 மற்றும் 29 சூன் 2004 இடையே மத்திய பிரதேசத்தின் ஆளுநராகப் பொறுப்பிலிருந்தார்.[8][9]

ஏப்ரல் 30, 2005 அன்று ராய்பூரில் உள்ள ராஜ் பவனில் சத்தீசுகர் ஆளுநர் சேத்துடன் பிரதமர் இந்தியப் மன்மோகன் சிங்.

முக்கிய இராணுவ விருதுகள்[தொகு]

இவர் பன்னாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி குழுவின் ஆசிய திரைப்பட தொலைக்காட்சி அகதமியின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Lt Gen Seth takes oath as Chhattisgarh Governor". 2003-01-02. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  2. "17 PARA Field Regiment". 2019-01-26. Archived from the original on 2022-03-25. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Sudarshan Chakra corps celebrate 3rd reunion". 2008-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  4. "New #DGMO Lt Gen Anil Chauhan (R) handing over charge of all imp 3 Corps in Dimapur to Lt Gen Gopal R." 2018-01-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  5. "The 22-year ordeal of Luingam Luithui for justice". 2017-08-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  6. "LIST OF PAST GOVERNORS". பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  7. "A school to counter Naxals". 2010-04-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  8. "The Chronological List of the Governors of Madhya Pradesh". பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  9. "Seth takes over as acting Governor of MP". 2004-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  10. "Hon'ble Governor Lt.Gen. K.M.SETH (PVSM, AVSM) (Retired)". பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  11. "Governing Council". பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_மோகன்_சேத்&oldid=3721189" இலிருந்து மீள்விக்கப்பட்டது