அகர்னானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகர்னானியா
Ἀκαρνανία
பண்டைக் கிரேக்க பிராந்தியம்
அரங்கின் இடிபாடுகள், ஸ்ட்ராடோஸ்
அரங்கின் இடிபாடுகள், ஸ்ட்ராடோஸ்
Map of ancient Acarnania
Map of ancient Acarnania
அமைவிடம்மேற்கு கிரேக்கம்
பெரிய நகரம்ஸ்ட்ராடோஸ்
பேச்சுவழக்குடோரிக்

அகார்னானியா ( கிரேக்கம்: Ἀκαρνανία‎ ) என்பது மேற்கு-நடு கிரேக்கத்தின் ஒரு பகுதி ஆகும். இது அயோனியன் கடலோரத்தில், ஏட்டோலியாவுக்கு மேற்கே, அச்செலஸ் ஆற்றை எல்லையாக கொண்டுள்ளது. மேலும் இது கொரிந்து வளைகுடாவின் நுழைவாயில்போல கலிடன் வளைகுடாவின் வடக்கே அமைந்துள்ளது. இன்று இது ஏட்டோலியா-அகார்னானியாவின் பிராந்திய அலகின் மேற்குப் பகுதியாக உள்ளது. இதன் பண்டைய காலத்தலை தலைநகரமும், முக்கிய நகரமாக ஸ்ட்ராடோஸ் இருந்தது. கொரிந்தியன் வளைகுடாவின் அகர்னானியாவின் வடக்கு [1] பகுதி எபிரஸ் பகுதியின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.

கிரேக்கத் தொன்மவியலில் அகர்னானியாவின் அடித்தளம் என்று பாரம்பரியமாக அல்க்மேயோனின் மகன் அகர்னன் என்று கூறப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Adages III iv 1 to IV ii 100 by Desiderius Erasmus, 2005, ISBN 0802036430, page 538, "Acarnania on the northern side of the Corinthian gulf was part of Epirus"
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகர்னானியா&oldid=3404348" இலிருந்து மீள்விக்கப்பட்டது