பில் கோல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில் கோல்சன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுபாட்டிலே இஸ்கேர்ஸ் #6 (ஏப்ரல் 2012)
உருவாக்கப்பட்டது
கதை தகவல்கள்
முழுப் பெயர்பிலிப் ஜே. கோல்சன்
குழு இணைப்பு
  • ஸ்குவாட்ரான் சுப்ரின்
  • ஷீல்ட்
  • சீக்ரெட் அவெஞ்சர்ஸ்
  • பவர் எலைட்
பங்காளர்கள்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்சீஸ்
ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்

பில் கோல்சன் (ஆங்கில மொழி: Phil Coulson) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இந்த கதாப்பாத்திரத்தை கிறிஸ்டோபர் யோஸ்டு, மாத் பிராக்சன் மற்றும் கலென் பன் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். இவரின் முதல் தோற்றம் ஏப்ரல் 2012 இல் வெளியான 'பாட்டிலே இஸ்கேர்ஸ் #6' என்ற கதையின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் கிளார்க் கிரெக்[1] என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச ஊடக உரிமையில் கீழ் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் ஷீல்ட் என்ற உளவு நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ள உறுப்பினராகவும் மற்றும் நிக் ப்யூரியின் பங்குதாராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இவர் "இன்ஃபினிட்டி சாகா"வில் ஒரு மைய நபராக இருந்தார், அத்துடன் ஐந்து படங்கள், இரண்டு தொலைக்காட்சித் தொடர்கள், ஒரு டிஜிட்டல் தொடர் மற்றும் இரண்டு மார்வெல் ஒன்-சாட்களில் தோன்றினார்,[2][3] குறிப்பாக தி அவேஞ்சர்ஸ் (2012) மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013–2020).[4] இவரின் கதாபாத்திரம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் இருந்து கோல்சனின் பல பதிப்புகள் தோன்றின, குறிப்பாக ஷீல்ட் இன் நேரடி தொடரிலும் மற்றும் வாட் இப்...? (2021) என்ற இயங்கு படத்தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Marnell, Blair (April 28, 2010). "Clark Gregg's Iron Man 2 S.H.I.E.L.D. Agent Will 'Do Some Exciting Things' In Thor". MTV News. Archived from the original on September 21, 2013. பார்க்கப்பட்ட நாள் August 3, 2011.
  2. Bibbiani, William (September 5, 2011). "Clark Gregg on The Avengers, Marvel One-Shots, Iron Man 3 and more!". CraveOnline. Archived from the original on September 29, 2013. பார்க்கப்பட்ட நாள் September 7, 2011.
  3. Strom, Marc (August 2, 2011). "Marvel One-Shots: Expanding the Cinematic Universe". Marvel.com. பார்க்கப்பட்ட நாள் August 3, 2011.
  4. Valentine, Evan (June 2, 2014). "Marvel's AGENTS OF S.H.I.E.L.D.: The H.I.G.H.S. and L.O.W.S. of the ABC Series' Freshman Season". Collider. Archived from the original on September 19, 2014. பார்க்கப்பட்ட நாள் September 19, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_கோல்சன்&oldid=3404088" இலிருந்து மீள்விக்கப்பட்டது