கால்சிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சால்கிடா
Chalkida

Χαλκίδα
கால்சிஸின் கடற்பகுதி
கால்சிஸின் கடற்பகுதி
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: நடு கிரேக்கம்
மண்டல அலகு: யூபேயா
மேயர்: Eleni Vaka  (New Democracy)
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 1,02,223
 - பரப்பளவு: 424.77 km2 (164 sq mi)
 - அடர்த்தி: 241 /km2 (623 /sq mi)
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 59,125
 - பரப்பளவு: 30.80 km2 (12 sq mi)
 - அடர்த்தி: 1,920 /km2 (4,972 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (min-max): 0–5 m ­(0–16 ft)
அஞ்சல் குறியீடு: 341 00
தொலைபேசி: 22210
வாகன உரிமப் பட்டை: ΧΑ
வலைத்தளம்
www.dimoschalkideon.gr

கால்சிஸ் (Chalcis, KAL-siss [2] பண்டைய கிரேக்கம் & கத்தரேவௌசா : Χαλκίς , romanized: Chalkís ( நவீன கிரேக்கம் : Χαλκίδα , romanized: ஹல்கிதா, pronounced [xalˈciða] ) என்பது என்பது கிரேக்கத்தில் உள்ள யூபோயா அல்லது ஈவியா தீவின் முக்கிய நகரமாகும், இது யூரிபஸ் நீரிணையில் அதன் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெயரானது பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து வழங்கி வந்துள்ளது. இதன் பெயர் கிரேக்கச் சொல்லான χαλκός ( தாமிரம், வெண்கலம் ) என்பதிலிருந்து வந்தது இருப்பினும் இப்பகுதியில் சுரங்கங்கள் எதுவும் இல்லை. [3] [4] இடைக்காலத்தின் பிற்பகுதியில், இது நெக்ரோபான்ட்(இ) என அறியப்பட்டது. இது ஒரு இத்தாலிய பெயர், இது யூபோயா தீவுக்கும் பயன்படுத்தப்பட்டது.

வரலாறு[தொகு]

பண்டைய கிரேக்கம்[தொகு]

சால்கிடாவின் தொல்லியல் அருங்காட்சியகம்
பண்டைய ரோமானிய கால்வாய்ப்பாலத்தின் தோற்றம்

கால்சிசின் ஆரம்பகால பதிவு இலியாடில் உள்ளது,[5] அது இதன் போட்டியாளரான எரீத்திரியாவை குறிப்பிடும் அதே வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரோயன் போருக்காக அமைக்கப்பட்ட கப்பல்கள் நகருக்கு அருகில் உள்ள நீரிணையின் தென் கரையான ஆலிசில் கூடின என்பதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மைசீனியன் காலத்தைச் சேர்ந்த டிரிபா மற்றும் உரோமோசாவில் உள்ள கல்லறைகள் 1910 இல் பாப்பாவாசிலியோவால் அகழப்பட்டன. கிமு 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில், கால்சிசின் குடியேற்றவாசிகள் கால்சிடிஸ் தீபகற்பத்தில் முப்பது நகரியங்களையும், மாக்னா கிரேசியா மற்றும் சிசிலியில் உள்ள நக்ஸோஸ், ரெஜியன், ஜாங்கிள் மற்றும் குமே போன்ற பல முக்கிய நகரங்களையும் நிறுவினர் . இதன் கனிம உற்பத்திப் பொருட்கள், உலோகப் பொருட்கள், செவ்வூதா, மட்பாண்டங்கள் போன்றவை இந்த குடியிருப்புகளில் சந்தைகளில் விற்பனை ஆனது மட்டுமல்லாமல், கொரிந்த் மற்றும் சாமோஸ் கப்பல்களில் மத்தியதரைக் கடலில் கொண்டு செல்லப்பட்டன. [3]

இந்த கூட்டாளிகளின் உதவியுடன், சால்சிஸ் தனது அண்டை நாடான எரெட்ரியாவின் போட்டி கூட்டணியுடன் லெலான்டைன் போரில் ஈடுபட்டது. இதன் மூலம் அது யூபோயாவின் சிறந்த வேளாண் மாவட்டத்தை கைப்பற்றி தீவின் முக்கிய நகர அரசாக மாறியது. கிமு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஏதெனியர்களுடனான போரால் பேரழிவை சந்தித்து இதன் செழிப்பு அழிபட்டது. அவர்கள் ஆளும் பிரபுக்களை வெளியேற்றி, அந்த இடத்தில் ஒரு தன் சார்பு அரசாங்கத்தையும் குடியேற்றறத்தையும் கொண்டுவந்தனர். சால்சிஸ் இரண்டு டெலியன் கூட்டணிகளிலும் உறுப்பினரானாது. [3]

கால்கிஸ் பழங்காலத்திலிருந்தே கிரேக்க-யூத மக்களைக் கொண்டிருந்தது. இது தொடர்ச்சியாக இருந்ததாகவும், ஐரோப்பாவின் பழமையான யூத சமூகத்தைக் கொண்டிருந்ததாகவும் சிலசமயங்களில் கூறப்படுகிறது,[6] இருப்பினும் ஆரம்பகால இடைக்காலத்தில் அதற்கான ஆதாரங்கள் இல்லை.[7]

ஹெலனிஸ்டிக் காலத்தில், மாசிடோனிய ஆட்சியாளர்கள் நடு கிரேக்கத்தைக் கட்டுப்படுத்திய கோட்டையாக இது முக்கியத்துவம் பெற்றது. இது சிரியாவின் மூன்றாம் ஆண்டோக்கஸ் (கி.மு. 192) மற்றும் போன்டஸின் ஆறாம் மித்ராடேட்ஸ் (கி.மு. 88) ஆகியோரால் கிரேக்கத்தின் மீது படையெடுப்பதற்கான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. Richmond, Henry J. (1905), The Pronunciation of Greek and Latin Proper Names in English, Ann Arbor: George Wahr, p. 32, ISBN 9780857927866, archived from the original on 2016-03-04
  3. 3.0 3.1 3.2 3.3 Chisholm 1911.
  4. Simon C. Bakhuizen, R. Kreulen, Chalcis-in-Euboea: Iron and Chalcidians Abroad, Brill Archive, 1976, p. 58.
  5. Homer, Il., Bk. II, l. 537.
  6. "ΚΟΙΝΟΤΗΤΑ ΧΑΛΚΙΔΑΣ - ΙΣΤΟΡΙΚΟ". Kis.gr. Archived from the original on 23 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7.  Deutsch, Gotthard (1901–1906). "Chalcis". Jewish Encyclopedia 3.  
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சிஸ்&oldid=3928842" இலிருந்து மீள்விக்கப்பட்டது