கருவண்ணூர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவண்ணூர் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபூமாலை மலைகள்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
திருச்சூர் கோலே ஈரநிலம்
நீளம்48 km (30 mi)

கருவண்ணூர் ஆறு (Karuvannur River) என்பது தென்னிந்தியாவில்கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ஓடும் நான்காவது பெரிய ஆறு ஆகும். குருமாலி ஆறு, மணலி ஆறும் இணைந்து கருவண்ணூர் ஆறாகப் பாய்கின்றது.

ஆற்றோட்டம்[தொகு]

மணலி ஆறு மற்றும் குருமாலி ஆறு ஆகிய இரு ஆறுகளின் சங்கமத்தால் ஆறட்டுப்புழாவில் இந்த ஆறு உருவாகிறது. பின்னர் கருவண்ணூர் ஆறு கோலே சதுப்புநிலங்களுக்கிடையே பாய்கிறது. இந்த ஆறு திருச்சூர் கோலே சதுப்புநிலங்களை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. வடக்கில் 8,072 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வடக் கோல் என்றும், தெற்கில் 2,115 ஹெக்டேர் பரப்பளவு தென்கோல் என்றும் இப்பகுதிகள் அழைக்கப்படுகின்றன.[1] கருவண்ணூர் ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து இரண்டாகப் பிரிகிறது. ஒன்று திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோனோலி கால்வாயில் சேர்ந்து எனமக்கல் ஏரியிலும் மற்றொன்று பெரியாற்றிலும் கலக்கிறது. இந்த ஆறு 48 கிலோமீட்டர் நீளமும் 1,054 கிமீ 2 நிலப் பரப்பையும் கொண்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிப் பகுதிகள் இந்த ஆற்றிலிருந்து குடிநீர் பெறுகின்றன.[2]

விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள்[தொகு]

கடந்த 150 ஆண்டுகளாக அழிந்து வரும் இனமாகக் கருதப்பட்ட புழுக்கூரி மீன் கடந்த 2014-ம் ஆண்டு சாவர அரசு கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் மேத்யூஸ் பிளாமூட்டில் என்பவரால் இந்த ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "STUDIES ON THE ALGAL FLORA OF KOLE LANDS IN THRISSUR DISTRICT, KERALA" (PDF). Shodh. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.
  2. "About the Rivers of Kerala". Tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-14.
  3. "Fish considered extinct 'rediscovered' in Karuvannur river". Mathrubhumi.com. Archived from the original on 5 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவண்ணூர்_ஆறு&oldid=3392907" இலிருந்து மீள்விக்கப்பட்டது