ராப்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராப்ரி ( IAST : Rabaḍī) என்பது ஒரு இனிப்பு ஆகும். இது பாலினை சுண்டக் காய்ச்சி தயாரிக்கப்படுகிறது. இது இந்தியத் துணைக்கண்டத்தினைச் சார்ந்த பாலினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு ஆகும். பாலை குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் கொதிக்க வைத்து, பாலில் உள்ள நீர் ஆவியாகி பாலின் அடர்த்தி அதிகமாகி நிறமானது வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறும் வரை காய்ச்சப்படுகிறது. வெல்லம், மசாலாப் பொருட்கள் மற்றும் பருப்புகள் ஆகியவை சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றன. இது குளிர்விக்கப்பட்டு இனிப்பாகப் பரிமாறப்படுகிறது. இரசபாலி, செனா கீரி மற்றும் கிரா சாகர போன்ற பல இனிப்புகளில் ராப்ரி முக்கிய மூலப்பொருள் ஆகும்.

இதேபோன்ற உணவு பசுந்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பாரம்பரிய இந்திய ஐஸ்கிரீம் குல்ஃபி ராப்ரி மற்றும் ரோஜா இதழ் ஜாம் குல்கந்துடன்

வரலாறு[தொகு]

சண்டிமங்கலாவின் கருத்தின்படி 1400களின் முற்பகுதியில் மற்ற இனிப்புகளுடன் ராப்ரி தயாரிக்கப்பட்டுள்ளது.[1]

கொல்கத்தாவில் 1965-ல் பொருளாதார மந்தநிலையின் போது ராப்ரி தயாரிக்க அதிகளவில் பால் பயன்படுத்தியதற்காகத் தடை செய்யப்பட்டது. பின்னர் இனிப்புக் கடைகளின் வழக்குகள் காரணமாகக் கல்கத்தா உயர் நீதிமன்றத்தால் இத்தடையினை ஓராண்டுக்குப்பின் நீக்கியது.[2] 

பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் பெயரானது இந்த உணவு பெயரின் அடிப்படையில் இடப்பட்டது; ராப்ரி தேவியின் குடும்பத்தில் உள்ளோரின் பெயர்கள் அனைத்தும் இனிப்புகளின் அடிப்படையில் இடப்பட்டதாகும்.[3]

தயாரித்தல்[தொகு]

ராப்ரி தயார் செய்ய ஒரு பெரிய திறந்த பாத்திரத்தில் (கடாய்) இனிப்பு கலந்த பாலை சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பாலின் மேற்பரப்பில் நுரை உருவாகத் தொடங்கும் போது, நுரை நீக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது. பால் தீர்ந்து போகும் வரை இச்செயல்முறை தொடர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Full text of "Indian Food Tradition A Historical Companion Achaya K. T."". archive.org. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
  2. "The Bitterest Ban: The improbable story of how Bengal tried to ban Bengali sweets". Economic Times Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-07-25. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  3. Akbar, M. J.. "M. J. Akbar: Laloo steals Congress seats in Bihar for sweet Rabri" (in en). gulfnews.com. https://gulfnews.com/uae/m-j-akbar-laloo-steals-congress-seats-in-bihar-for-sweet-rabri-1.319862. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராப்ரி&oldid=3388119" இலிருந்து மீள்விக்கப்பட்டது