யூப்பாட்ரிட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூப்பாட்ரிட்டுகள் (Eupatridae, /jˈpætrɪd/ (அதாவது "நல்ல தந்தை", அதாவது "உன்னத தந்தைகளின் சந்ததி" அல்லது "உயர் குடியில் பிறந்தவர்") என்பவர்கள் பண்டைய கிரேக்கப்பகுதியான அட்டிகாவின் பிரபுக்களைக் குறிக்கிறது.

தோற்றம்[தொகு]

தீசுசு ஏதென்சை சுற்றியுள்ள கிராமங்களை ஒன்று சேர்த்து ஏதென்சின் ஆளுமைக்கு உட்படுத்தினார். மேலும் அட்டிக் மக்களை யூபாட்ரிடே, ஜியோமோரி, டெமியுர்கி என மூன்று வகுப்புகளாகப் பிரித்தார். யூப்பாட்ரிட்டுகளின் பண்புகளாக பூர்வ குடி மக்கள் நகரத்தில் வசிப்பவர்கள், அரசாங்க அதிகாரங்கள் பெற்றவர்கள் என்று அகராதியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். சினோசிசத்தின் காலத்திற்குப் பிறகு, அதுவரை பல்வேறு சுயாட்சி சமூகங்களை ஆட்சி செய்த பிரபுக்கள் அப்போது அரசாங்கத்தின் தலைமை இடமான ஏதென்சில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஏதெனியன் வரலாற்றின் தொடக்கத்தில் உன்னத குலங்கள் அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக கொண்ட ஒரு வகுப்பாக உருவாகின. ஆரம்ப காலங்களில் யூபட்ரிடே மட்டுமே ஏதென்சின் குடிமக்களாக இருந்திருக்கலாம்; ஏனென்றால், அவர்கள் மட்டுமே ஃபிரட்ரிகளை சேர்ந்தவர்கள் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த யூப்பாட்ரிட்டுகளே மேல் வகுப்பினராக கருதப்பட்டனர். அரசாங்க அதிகாரங்கள் இவர்களிடமே இருந்தன.

மற்ற வகுப்புகளுடன் தொடர்பு[தொகு]

மற்ற இரண்டு வகுப்புகளுக்கும் யூப்பாட்ரிட்டுகளுக்கும் இடையிலான தொடர்பு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. யூப்பாட்ரிட்டுகள் ஆளும் வர்க்கம், அங்கீகரிக்கப்பட்ட ஒரே பிரபுக்கள், ஜியோமோரி பிரிவினர் தொழில் திறமை வாய்ந்தவர்கள் வணிகர்களாவர், டெமியுர்கி பிரிவினர் கைவினைஞர்கள் மற்றும் உழைக்கும் வர்கத்தினராக இருக்கலாம்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 7. ஆத்தென்ஸ் (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். பக். 130-131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூப்பாட்ரிட்டுகள்&oldid=3376560" இலிருந்து மீள்விக்கப்பட்டது