பாவனி சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவனி சமஸ்தானம்
बावनी रियासत / باونی ریاست
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1784–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பாவனி
Location of பாவனி
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் பாவனி சமஸ்தானம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1784
 •  இந்திய விடுதலை 1948
பரப்பு
 •  1901 313 km2 (121 sq mi)
Population
 •  1901 19,780 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா[1]
பாவனி சமஸ்தானத்தின் கொடி[2]

பாவனி சமஸ்தானம் (Baoni State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். பாவனி இராச்சியம் பேட்வா-யமுனை சமவெளியில், தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜாலவுன் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் காதௌரா நகரம் ஆகும். இதனை இசுலாமிய நவாப்புகள் ஆண்டனர்.

இது 1806 முதல் பிரித்தானிய இந்தியாவின் புந்தேல்கண்ட் முகமையின் கீழிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாவனி இராச்சியம் 313 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 19,780 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

ஐதராபாத் நிஜாமின் வழித்தோன்றல்கள் 1784-இல் பாவனி இராச்சியத்தை நிறுவினர்.[3] பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த பாவனி இராச்சியம், 1806-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்று, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது புந்தேல்கண்ட் முகமையின் கீழ் இருந்தது. பாவனி இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பாவனி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பாவனி இராச்சியத்தின் பகுதிகள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hunter, Sir William Wilson; Trübner & Co., London 1885
  2. Baoni-Bundelkhand – Fotw
  3. Hunter, Sir William Hunter; Cotton, James Sutherland; Burn, Richard; Meyer, William Stevenson (1908). The Imperial Gazetteer of India. Oxford: Great Britain India Office, Clarendon Press. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனி_சமஸ்தானம்&oldid=3614415" இலிருந்து மீள்விக்கப்பட்டது