இராம் சுவரூப் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் சுவரூப் சர்மா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 17 மார்ச் 2021
தொகுதிமண்டி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1958 (1958-06-10) (அகவை 65)
ஜோகிந்தர் நகர் மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு17 மார்ச்சு 2021(2021-03-17) (அகவை 62)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி
துணைவர்சம்பா சர்மா
பிள்ளைகள்3
பெற்றோர்ராமேஸ்வர் - நிர்மலா
வாழிடம்(s)ஜோகிந்தர் நகர் மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

இராம் சுவரூப் சர்மா (10 ஜூன் 1958 - 17 மார்ச் 2021) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அரசியல் பணி[தொகு]

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிந்தர்நகரில் சர்மா பிறந்தார். சர்மா பா. ஜ. க. வின் (மண்டி மாவட்டம்) அமைப்புச் செயலாளராக இருந்தார். பின்னர் பாஜகவின் (இமாச்சலப் பிரதேசம்) அமைப்புச் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டார். இவர் மாநில உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கும் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளராக மண்டி தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஸ்ரீமதியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[2] இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தலில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இவர் 2019இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு[தொகு]

சர்மா 17 மார்ச் 2021 அன்று புது தில்லியில் இறந்தார். இவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேலும் இவரது மரணம் தற்கொலையா என தில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen, Meghna (17 March 2021). "Himachal Pradesh BJP MP Ram Swaroop Sharma found dead at Delhi residence" (in en). mint. https://www.livemint.com/news/india/himachal-pradesh-bjp-mp-ram-swaroop-sharma-found-dead-at-delhi-residence-11615956247594.html. 
  2. "Shimla BJP to field Ram Swaroop Sharma from Mandi LS seat". Business Standard India. Press Trust of India. 26 March 2014. http://www.business-standard.com/article/pti-stories/shimla-bjp-to-field-ram-swaroop-sharma-from-mandi-ls-seat-114032601306_1.html. 
  3. Sengar, Mukesn Singh; Nair, Arun (March 17, 2021). "BJP MP Ram Swaroop Sharma Found Dead At Delhi Home, Suicide Suspected". NDTV. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சுவரூப்_சர்மா&oldid=3926531" இலிருந்து மீள்விக்கப்பட்டது