எலட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலட்கள் (Helots, (/ˈhɛləts, ˈhləts/; கிரேக்க மொழி: εἵλωτες, heílotes) என்பவர்கள் எசுபார்த்தாவை உள்ளடக்கிய பிரதேசங்களான லாகோனியா மற்றும் மெசேனியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக இருந்தவர்களான அடிமைப்படுத்தப்பட்ட மக்களாவர். இவர்கள் ஒரு பண்டைய கிரேக்க பழங்குடியினரா, ஒரு சமூக வகுப்பினரா அல்லது இரண்டுமா என்பது போன்றவை குறித்து பழங்காலத்திலிருந்தே சர்ச்சைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கிரிடியாஸ் எலட்களை "அதிகபட்ச அடிமைகள்" என்று விவரித்தார், [1] அதேசமயம் போலக்சு கூற்றின் படி, இவர்கள் "சுதந்திரமான மனிதர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையே" உள்ள ஒரு பிரிவினர் என்ற அந்தஸ்தைப் பெற்றனர். [2] இவர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டு, முதன்மையாக பெரும்பான்மையாக வேளாண்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் எசுபார்த்தா குடிமக்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவாக இருந்தனர்.

எசுபார்டன் குடிமக்களுக்கும் எலட்களின் எண்ணிக்கை விகிதத்துக்குமான வேறுபாடு எசுபார்த்தா நாட்டின் வரலாற்று காலம் முழுவதும் வேறுபட்டதாக இருந்துள்ளது. எரோடோடசின் கூற்றுப்படி, கிமு 479 இல் பிளாட்டியா போரின் போது ஒவ்வொரு எசுபார்டனுக்கும் ஏழு எலைட்கள் என்ற விகிதத்தில் இருந்தனர். [3] எனவே எலைட் மக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் அவர்களின் கிளர்ச்சியைத் தடுப்பது என்பது எசுபார்டான்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாகும். எலைட்கள் பார்ம்பரியமாக தவறாக நடத்தப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர்: ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் எசுபார்த்தான்கள் எலட்டுகள் மீது போரை அறிவிப்பார்கள், அதனால் இவர்கள் கிரிப்டியா குழு உறுப்பினரால் சமய விளைவுகளுக்கு அஞ்சாமல் கொல்லப்படலாம். [4] [5] [6] சினாடனின் சதி போன்ற எழுச்சிகள் போன்றவை எலட்களின் நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகும்.

சிறப்பியல்புகள்[தொகு]

எசுபார்த்தன்களுடனான உறவு[தொகு]

குறைந்த பட்சம் செவ்வியல் காலத்திலிருந்தே, எலட்களுடன் ஒப்பிடுகையில் எசுபார்தான்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. "பெரும்பாலான எசுபார்த்தன் அமைப்புகள் எலட்களுக்கு எதிரான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எப்போதும் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று ஒரு புகழ்பெற்ற பத்தியில், துசிடிடீஸ் குறிப்பிடுகிறார். [7] அரிஸ்டாட்டில் அவர்களை "எசுபார்தான்களின் பேரழிவுக்காக தொடர்ந்து காத்திருக்கும் ஒரு எதிரி" என்று ஒப்பிடுகிறார். [8] இதன் விளைவாக, எசுபார்டன்கள் மற்றும் எலட்களுக்கு இடையேயான உறவுகளை நிர்வகிக்கும் ஒரு முக்கிய காரணியாக பயம் என்பதே இருந்துள்ளது. இதனால் புரட்சியில் ஈடுபட்டால் இவர்களை எதிர்கொள்ள எசுபார்டியேட் வீரர்கள் எப்போதும் தயாராக இருந்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Apud Libanios, Orationes 25, 63 = Frag. 37 DK; see also Plutarch, Li hi Lycurgus 28, 11.
  2. Pollux 3, 83. The expression probably originates in Aristophanes of Byzantium; Cartledge, p.139.
  3. Herodotus. Histories 9.10.
  4. Plutarch, Life of Lycurgus, 28, 3–7.
  5. Herakleides Lembos Fr. Hist. Gr. 2, 210.
  6. Athenaeus, 657 D.
  7. Trans. by Cartledge, Annex 4, p. 299; The sentence can also be translated quite differently: "as far as the Helots are concerned, most Spartan institutions have always been designed with a view to security" (ibid.). Thycydides 4, 80, 3.
  8. Politics 1269 a 37–39.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலட்கள்&oldid=3452601" இலிருந்து மீள்விக்கப்பட்டது