குமாவுன் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாவுன் நாடு
600–1791
கொடி of குமாவுன் இராச்சியம்
கொடி
1765-ஆம் ஆண்டில் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் குமாவுன் இராச்சியத்தின் வரைபடம்
1765-ஆம் ஆண்டில் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் குமாவுன் இராச்சியத்தின் வரைபடம்
நிலை
  • கத்தியுரி வம்சம் (7–12-வது நூற்றாண்டுகள்)
  • சந்த் வம்சம் (12–18-வது நூற்றாண்டுகள்)
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்குமாவனி, சமசுகிருதம்
சமயம்
இந்து சமயம்
மக்கள்குமாவனியர்கள்
அரசாங்கம்முடியாட்சி
மகாராஜா 
• 600
வாசு தேவ் (முதல்)
• 1791
மகேந்திர சந்த் (இறுதி)
வரலாறு 
• நிறுவப்பட்டது
600
• கூர்க்கா படைகள் குமாவுனை வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்தனர்
1791
முந்தையது
பின்னையது
குலிந்தப் பேரரசு
நேபாள இராச்சியம்
தற்போதைய பகுதிகள்குமாவுன் கோட்டம், உத்தராகண்டம், இந்தியா

குமாவுன் இராச்சியம் (Kumaon Kingdom) தன்னாட்சி கொண்ட இமயமலையில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் கிழக்கில் நேபாள இராச்சியத்தை ஒட்டி அமைந்த தற்கால குமாவுன் கோட்டத்தின் பகுதிகளை கொண்டிருந்தது. இதன் தலைநகரமாக பைஜ்நாத் (600–1200), சம்பாவத் (1200–1563) மற்றும் அல்மோரா (1563–1791) நகரங்கள் இருந்தது. சந்த் வம்சம் (12–18-வது நூற்றாண்டுகள் குமாவுன் இராச்சியத்தை 7-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை கத்தியுரி வம்சத்தினரும், 12-ஆம் நூற்றாண்டு முதல் 18-வது நூற்றாண்டு வரை சந்த் வம்சத்தினரும் ஆட்சி செய்தனர்.

குமாவுன் இராச்சியத்தை கிபி 1791-ஆம் ஆண்டில் கூர்க்காப் படைகள் குமாவுன் இராச்சியத்தை வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்தனர். அது வரை குமாவுன் இராச்சியம் தன்னாட்சியுடன் ஆட்சி செய்தது.[1]

வரலாறு[தொகு]

ஆங்கிலேய-நேபாளப் போர்[தொகு]

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் நோக்கில், நேபாள இராச்சியத்திற்கு எதிராக, கிபி 1814 - 1846 ஆண்டுகளில் தொடுத்த போரின் முடிவில் இருதரப்பினரும், மார்ச், 1816 இல் சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினரால் பிற இராச்சியத்தினரிடமிருந்து கைப்பற்றியிருந்த (தற்கால) கார்வால் நாடு, குமாவுன் இராச்சியம், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தரப்பட்டதால், குமாவுன் இராச்சியம் பிரித்தானிய இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது.

குமாவுன் இராச்சியம், 1937 முதல் 1950 வரை ஐக்கிய மாகாணத்தின் கீழிருந்தது. பின்னர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் புதிதாக உத்தராகண்டம் மாநிலம் நிறுவப்பட்ட போது, குமாவுன் இராச்சியப் பகுதிகள் குமாவுன் கோட்டமாக உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Atkinson, Edwin T. (Edwin Thomas), 1840-1890. (1990). Himalayan Gazetter.. Cosmo. இணையக் கணினி நூலக மையம்:183008777. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாவுன்_இராச்சியம்&oldid=3381019" இலிருந்து மீள்விக்கப்பட்டது